மேலும்

நாள்: 22nd October 2018

இந்தியப் பெருங்கடலின் பாதுகாப்பு – சீனாவும் பங்கு கோருகிறது

இந்தியப் பெருங்கடலின் பாதுகாப்பை எந்தவொரு தனிநாடும் உறுதி செய்ய முடியாது என்றும், அதில் தாமும் பெரிய பங்கை வகிக்க விரும்புவதாகவும், சீனக் கடற்படை தெரிவித்துள்ளது.

மைத்திரி கொலைச் சதி – நாமல் குமாரவின் அலைபேசியை சீனாவுக்கு அனுப்ப முடிவு

சிறிலங்கா அதிபரைப் படுகொலை செய்யும் சதித்திட்டம் தொடர்பாக தகவல் வெளியிட்ட நாமல் குமாரவின் அலைபேசியை தடயவியல் ஆய்வு செய்வதற்கு, சீன நிபுணர்களிடம் உதவி கோர சிறிலங்கா அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவில் அமெரிக்க டொலரின் மதிப்பு ரூ. 173.38 ஆனது

அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா நாணயத்தின் பெறுமதி இன்று வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாதளவுக்கு  வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. 

சிறிலங்கா அதிபராகும் கோத்தாவின் கனவு

டி.ஏ.ராஜபக்ச நினைவிடம் அமைப்பதில் 80 மில்லியன் ரூபா மோசடி செய்யப்பட்டது  தொடர்பான குற்றச்சாட்டை எதிர்கொள்வதற்காக, அடுத்த அதிபர் வேட்பாளராகப் போட்டியிடுவார் என நம்பப்படும் கோத்தாபய  ராஜபக்ச கடந்த செவ்வாய்க்கிழமை புதிதாக உருவாக்கப்பட்ட  மேல்நீதிமன்றுக்குச் சென்றிருந்தார்.

‘அம்மாச்சி’யை அழிக்கக் கங்கணம் – 25 ஆம் நாள் ஆட்டத்தை தொடங்குகிறது சிறிலங்கா அரசு

வடக்கு மாகாண சபையினால் ஆரம்பிக்கப்பட்ட ‘அம்மாச்சி’ உணவகத்தின் பெயரை மாற்றுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மூடிய அறைக்குள் பேசிய இரகசியம் – வெளியாகும் பரபரப்புத் தகவல்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், மூடிய அறைக்குள் தனியாக நடத்திய சந்திப்பின் போது, தன்னைக் கொல்ல ‘றோ’ சதித் திட்டம் தீட்டியுள்ளதாக சிறிலங்கா அதிபர் வெளியிட்ட கருத்து தொடர்பாகவே பேசப்பட்டதாக, கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

போர்க்குற்றவாளிகள் இனிமேலும் ஐ.நாவின் கௌரவமான பதவிகளை வகிக்க முடியாது – யஸ்மின் சூகா

போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள, சிறிலங்கா இராணுவ அதிகாரியான, லெப்.கேணல் கலன அமுனுபுரவை மாலியில் இருந்து திருப்பி அனுப்ப ஐ.நா எடுத்துள்ள முடிவுக்கு, அனைத்துலக மனித உரிமை செயற்பாட்டாளரான, யஸ்மின் சூகா வரவேற்புத் தெரிவித்துள்ளார்.

ஐ.நாவின் உத்தரவு – கொந்தளிக்கிறார் கோத்தா

போர் வெற்றிக்குக் காரணமான இராணுவ அதிகாரி ஒருவரை  மாலியில் இருந்து திருப்பி அழைக்க வேண்டிய நிலை சிறிலங்கா அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளதானது, அனைத்துலக  சமூகத்தின் ஆதரவை இந்த அரசாங்கம் பெறவில்லை என்பதையே காட்டுகிறது என சிறிலங்காவின்  முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நான்கு அமைச்சர்களுக்கு ‘றோ’வுடன் தொடர்பு – மகிந்த அமரவீர

இந்தியாவின் பிரதான புலனாய்வு அமைப்பான ‘றோ’வுக்கு, சிறிலங்கா அமைச்சரவையிலுள்ள நான்கு அமைச்சர்கள் தகவல்களை வழங்கி வருகின்றனர் என்று அமைச்சரும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலருமான மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.