மேலும்

நாள்: 6th October 2018

இந்தியப் பெருங்கடலில் சிறிலங்கா கடற்படையுடன் ஜப்பான் கூட்டுப் பயிற்சி

இந்தியப் பெருங்கடலில் ஜப்பானிய கடற்படை, சிறிலங்கா கடற்படையுடன் இணைந்து நான்கு நாட்கள் கூட்டுப் பயிற்சி ஒன்றை நாளை ஆரம்பிக்கவுள்ளதாக, ஜப்பானின் ஜிஜி பிரஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரிக்கு சேவை நீடிப்பு – உயர் அதிகாரிகள் மத்தியில் குழப்பம்

சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் டம்பத் பெர்னான்டோவுக்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மூன்று மாத கால சேவை நீடிப்பை வழங்கியிருப்பது, இராணுவ உயர்மட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

மைத்திரி – மகிந்த இரகசியச் சந்திப்பு?

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் இரகசிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றிருப்பதாக, நம்பகமான அரசியல் வட்டாரங்களை மேற்கோள்காட்டி சிறிலங்கா மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியப் பெருங்கடல் விவகாரம் – கொழும்பில் கூடும் இந்திய, அமெரிக்க சீன உயர் அதிகாரிகள்

கொழும்பில் அடுத்தவாரம் நடைபெறவுள்ள இந்தியப் பெருங்கடல் தொடர்பான கருத்தரங்கில், இந்தியா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளின் உயர்மட்ட அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

சிறிலங்காவை சீனா கடன்பொறியில் தள்ளவில்லை – கருணாசேன கொடிதுவக்கு

நிதியை வழங்கி சீன அரசாங்கம்,  சிறிலங்கா அரசாங்கத்தை கடன் பொறிக்குள் கொண்டு செல்லவில்லை என்று சீனாவுக்கான சிறிலங்கா தூதுவர் கருணாசேன கொடிதுவக்கு தெரிவித்துள்ளார். சீனாவின் CGTN ஊடகத்துக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

அரசியல் கைதிகள் யாரும் இல்லை என்று கூட்டமைப்பிடம் கூறி விட்டோம்- தலதா அத்துகோரள

சிறிலங்காவில் அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை என, தாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்குத் திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டதாக கூறியுள்ளார், சிறிலங்காவின் நீதியமைச்சர் தலதா அத்துகோரள.

மகிந்தவின் புதல்வர்களின் பயணப் பொதியைக் காவிய சிறிலங்கா தூதுவரை திருப்பி அழைக்க அழுத்தம்

மகிந்த ராஜபக்சவின் இரண்டு புதல்வர்களையும், கட்டார் விமான நிலையத்தில் வரவேற்று அவர்களின், பயணப் பொதிகளைக் காவிச் சென்ற, கட்டார் நாட்டுக்கான சிறிலங்கா தூதுவர் ஏஎஸ்பி லியனகேயை திருப்பி அழைக்குமாறு சிறிலங்கா அதிபருக்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

நாடு மீண்டும் வன்முறைக்குத் திரும்பும் அபாயம் – பிரித்தானிய அமைச்சரிடம் சம்பந்தன்

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஆசிய பசுபிக் பகுதிகளுக்கான, பிரித்தானியாவின் வெளிவிவகார இணை அமைச்சர் மார்க் பீல்ட் நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

கடன்பொறியில் இருந்து சிறிலங்கா போன்ற நாடுகளை காப்பாற்ற அமெரிக்கா முன்வைக்கும் திட்டம்

அமெரிக்க அரசாங்கத்தின் பின்புலத்துடனான நிதி முதலீடுகளின் மூலம், சிறிலங்கா போன்ற நாடுகளை கடன் பொறியில் இருந்து காப்பாற்ற முடியும் என்று, அமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.