மேலும்

மத்தல விமான நிலையத்தின் ஓடுபாதை, நிலப்பரப்பை வசப்படுத்துகிறது சிறிலங்கா விமானப்படை

Mattala Rajapaksa International Airportமத்தல விமான நிலையத்தை அவசர தேவைகளுக்கும், தேசிய பாதுகாப்புத் தேவைகளுக்கும் பயன்படுத்துவதற்கான உரிமையையும், விமான நிலையத்தின் ஒரு பகுதி நிலத்தையும் தமக்கு வழங்க வேண்டும் என்று சிறிலங்கா விமானப்படை கோரிக்கை விடுத்துள்ளது.

மத்தல விமான நிலையத்தை இந்தியாவுடன் இணைந்து கூட்டு முயற்சியாக அபிவிருத்தி செய்வதற்கான பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், சிறிலங்கா விமானப்படை இந்தக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.

அவசர தேவைகளின் போதும், தேசிய பாதுகாப்பு பயன்பாடுகளுக்காகவும், மத்தல அனைத்துலக விமான நிலையத்தின் ஒரு ஓடுபாதைதையைப் பயன்படுத்துவதற்கு தமக்கு அனுமதி அளிக்கப்பட வேண்டும் என்று சிறிலங்கா விமானப்படை கோரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன், தேவைப்பட்டால் இராணுவத் தேவைகளுக்காக பயன்படுத்துவதற்கென, விமான நிலையத்தின் ஒரு பகுதி நிலத்தையும் தமக்கு ஒதுக்கித் தருமாறும் சிறிலங்கா விமானப்படை கோரியுள்ளது.

தேசிய பாதுகாப்பு நலன்களைக் காரணம் காட்டி சிறிலங்கா விமானப்படை மத்தல விமான நிலையத்தின் ஓடுபாதை மற்றும் நிலம் என்பனவற்றைப் பயன்படுத்த அனுமதி கோரியிருப்பதாக, சிவில் விமானப் போக்குவரத்து பணிப்பாளர் நிமலசிறி தெரிவித்துள்ளார்.

800 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள மத்தல விமான நிலையத்தை இந்தியாவுடன் இணைந்து செயற்படுத்தவதற்கான முயற்சிகளில் சிறிலங்கா விமானநிலைய மற்றும் விமானசேவை அதிகாரசபை நடவடிக்கை எடுத்து வரும் நிலையிலேயே சிறிலங்கா விமானப்படை இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது.

800 ஹெக்ரெயர் பரப்பளவில் அமைந்துள்ள விமான நிலையத்தில், 3 ஹெக்ரெயர் நிலப்பரப்பு விமான எரிபொருள் களஞ்சியப்படுத்தலுக்காக, சிறிலங்கா பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதேவேளை, சிறிலங்கா விமானப்படை இந்த நிலப்பரப்பில் 90 ஹெக்ரெயர் பகுதியை பாதுகாப்புத் தேவைகளுக்கு என்று கோரியுள்ளது.

எனினும் சிறிலங்கா விமானப்படையின் இந்தக் கோரிக்கை இந்தியாவுடனான கூட்டு முயற்சியைப் பாதிக்காது என்று சிவில் விமானப் போக்குவரத்து பணிப்பாளர் நிமலசிறி தெரிவித்துள்ளார்.

“நாட்டின் பாதுகாப்பு நிச்சயமாக உறுதிப்படுத்தப்பட வேண்டியது, எனவே விமானப்படைக்கு ஒருபகுதி நிலத்தை வழங்க வேண்டியது தவிர்க்க முடியாதது.

ஓடுபாதையை சிறிலங்கா விமானப்படை பயன்படுத்துவதால், சிவில் விமானப் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படாது.

ஏனென்றால், மற்றொரு திசையை நோக்கிய ஓடுபாதையே விமானப்படைக்கு வழங்கப்படும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *