மேலும்

அனந்தியையும் சிவகரனையும் கட்சியில் இருந்து நீக்குகிறது தமிழ் அரசுக் கட்சி

Ilankai-Tamil-Arasu-Kadchiவடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரனையும், சிவகரனையும் தமிழ் அரசுக் கட்சியில் இருந்து நீக்குவதற்கு கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் அரசுக் கட்சி சார்பில் போட்டியில் நிறுத்தப்பட்டு வெற்றி பெற்று தற்போது, வடமாகாணசபையின் அமைச்சராக பதவி வகிக்கும், அனந்தி சசிதரனும், தமிழ் அரசுக் கட்சியின் இளைஞரணி தலைவராகப் பதவி வகித்த சிவகரனையுமே, கட்சியில இருந்து நீக்க தமிழ் அரசுக் கட்சி முடிவு செய்துள்ளது.

2015 அதிபர் தேர்தலில் தமிழ் அரசுக் கட்சி எடுத்த முடிவுக்கு மாறாகச் செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டில், இவர்கள் இருவரும். ஏற்கனவே கட்சியில் இருந்து இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் நடந்த தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இவர்கள் இருவரையும் கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதன்போது, சிவகரனை உடனடியாக நீக்கலாம் என்றும், அனந்தியை நீக்கும் முடிவை பின்னர் எடுக்கலாம் என்றும் ஒரு சாரார் கருத்து வெளியிட்டுள்ளனர்.

எனினும், ஒரே காரணத்துக்கான இடைநிறுத்தப்பட்ட இருவர் மீதும் ஒரு நடவடிக்கையே எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதை அடுத்து, இவர்கள இருவரையும் கட்சியில் இருந்து நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஒரு கருத்து “அனந்தியையும் சிவகரனையும் கட்சியில் இருந்து நீக்குகிறது தமிழ் அரசுக் கட்சி”

  1. Prahasan says:

    Ananthi puthu katchi thodankuva pola???

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *