மேலும்

மாதம்: November 2017

93 உள்ளூராட்சி சபைகளுக்கு நாளை வேட்புமனுக்கள் கோரப்படும் – தேர்தல் ஆணையம் முடிவு

93 உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனுக்களைக் கோரும் அறிவிப்பை நாளை மாவட்டத் தெரிவத்தாட்சி அதிகாரிகள் வெளியிடுவர் என்று சிறிலங்கா தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

மாவீரர் நாளுக்காக மீளுயிர் பெறும் துயிலுமில்லங்கள்

தமிழீழ விடுதலைக்காக உயிர் கொடுத்த மாவீரர்களை நினைவு கூரும், மாவீரர் நாளுக்காக தாயகத்தில் உள்ள மாவீரர் துயிலுமில்லங்கள் தயாராகி வருகின்றன. மாவீரர் நாள் நாளை உலகெங்கும் ஈழத்தமிழர்கள் வாழும் நாடுகளில் நினைவுகூரப்படவுள்ளது.

வடக்கில் காணிகள் விடுவிப்புக்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழு – தினேஸ் குணவர்த்தன கோரிக்கை

வடக்கில் சிறிலங்கா இராணுவத்தின் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பான பணிகளை ஒருங்கிணைக்க,  நாடாளுமன்றத் தெரிவுக்குழு  ஒன்றை அமைக்க வேண்டும் என்று, கூட்டு எதிரணியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் தினேஸ் குணவர்த்தன வலியுறுத்தியுள்ளார்.

133 உள்ளூராட்சி சபைகளுக்கு திட்டமிட்டபடி தேர்தல்?

நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கினால், உள்ளூராட்சித் தேர்தல்கள் பிற்போடடப்படும் நிலை ஏற்பட்டுள்ள நிலையில், 133 உள்ளூராட்சி சபைகளுக்கு திட்டமிட்டவாறு தேர்தலை நடத்த முடியும் என்று தேர்தல்கள் ஆணையத்தின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

வர்த்தமானிக்கு எதிரான வழக்கை முன்கூட்டிய விசாரிக்க கோரும் மனு – சட்டமா அதிபர் தாக்கல் செய்கிறார்

உள்ளூராட்சித் தேர்தலுடன் தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிரான வழக்கை முன்கூட்டியே விசாரிக்கக் கோரும், மனுவொன்றை மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு சட்டமா அதிபர் ஜெயந்த ஜெயசூரிய இணங்கியுள்ளார்.

கஜேந்திரகுமாருடன் அரசியல் ரீதியாக இணைந்து செயற்படவில்லை – முதலமைச்சர்

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட அணியினருடன் தாம் அரசியல் ரீதியாக இணைந்து செயற்படவில்லை என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்று யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த போதே, அவர் இதனைக் கூறினார்.

கோத்தாவைக் காப்பாற்றிய சிறிலங்கா அதிபர்

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவைக் கைது செய்யும் திட்டத்தை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவே இடைநிறுத்தினார் என்று ‘ராவய’ சிங்கள வாரஇதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

கோத்தாவை கைது செய்ய சிறிலங்கா அதிபரின் அனுமதிக்காக காத்திருக்கும் காவல்துறை

அரசாங்க நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில், முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவைக் கைது செய்வதற்கு, சிறிலங்கா அதிபர் இன்னமும் பச்சைக்கொடி காண்பிக்கவில்லை என்று சட்டமா அதிபர் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பதவி விலகிவிடுவேன் – ஐதேகவுக்கு மைத்திரி எச்சரிக்கை

ஊழல், மோசடிகளுக்கு எதிரான முடிவுகளை எடுக்கும் போது, தனக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டால், எல்லாப் பதவிகளையும் கைவிட்டு விட்டு மக்களுடன் இணைந்து போராட்டத்தை முன்னெடுப்பேன் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன எச்சரித்துள்ளார்.

கோத்தாவுக்காக பிக்குகள் போராட்டத்தில் குதிப்பர் – எச்சரிக்கிறார் முறுத்தெட்டுவே ஆனந்த தேரர்

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச கைது செய்யப்பட்டால், அதற்கு எதிராக கணிசமானளவு பௌத்த பிக்குகள் வீதியில் இறங்குவார்கள் என்று முறுத்தெட்டுவே ஆனந்த தேரர் எச்சரித்துள்ளார்.