மேலும்

மாதம்: November 2017

சுமந்திரனைச் சந்தித்தார் அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உயர் அதிகாரி

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான, பதில் உதவிச் செயலர் ரொம் வஜ்டா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

ரஷ்ய போர்க்கப்பல் கொள்வனவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் – ரொகான் பலேவத்த எச்சரிக்கை

நாடு ஏற்கனவே பொருளாதார நெருக்கடிகளுக்குள் சிக்கியுள்ள நிலையில், ரஷ்யாவிடம் இருந்து போர்க்கப்பலைக் கொள்வனவு செய்வது மோசமான பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தும் என்று, சிறிலங்கா இலத்திரனியல் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவரான ரொகான் பலேவத்த எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இன்றிரவு வருகிறது எரிபொருள் கப்பல்- நாளை நண்பகல் தட்டுப்பாடு நீங்கும் என்கிறார் அமைச்சர்

இன்று இரவு எரிபொருள் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் என்றும், நாளை நண்பகலுக்குள், பெற்றோல் தட்டுப்பாடு முடிவுக்கு வரும் என்றும் சிறிலங்காவின் பெற்றோலிய வளங்கள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க  தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்துக்குள் நுழைய கீதா குமாரசிங்கவுக்கு தடை

நாடாளுமன்ற சிறப்புரிமைகளைப் பயன்படுத்தி, கீதா குமாரசிங்க நாடாளுமன்ற வளாகத்துக்குள் நுழைவதற்கு சபாநாயகர் கரு ஜெயசூரிய தடை விதித்துள்ளார்.

இந்தியா செல்கிறார் சிறிலங்கா பிரதமர்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இம்மாதம் மூன்றாவது வாரத்தில், சிறிலங்கா பிரதமரின் இந்தியப் பயணம் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சீனக் கடற்படையின் பாரிய கப்பல் வெள்ளியன்று கொழும்பு வருகிறது

சீன கடற்படையின் பயிற்சிக் கப்பலான Qi Jiguang (Hull 83) நான்கு நாட்கள் நல்லெண்ணப் பயணமாக வரும் வெள்ளிக்கிழமை கொழும்பு துறைமுகத்துக்கு வரவுள்ளது. இதுதொடர்பாக கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

பெற்றோல் தட்டுப்பாட்டுக்கு இந்திய நிறுவனம் காரணமல்ல – சிறிலங்கா பிரதமர்

சிறிலங்காவில் பெற்றோலுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டுக்கு லங்கா ஐஓசி எனப்படும் இந்திய நிறுவனமே காரணம் என்று சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை ஏற்க முடியாது என்றும்,  இந்த நெருக்கடிக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

15 ஆயிரம் தொன் பெற்றோலை இந்தியாவில் இருந்து விநியோகிக்க லங்கா ஐஓசி அவசர நடவடிக்கை

லங்கா ஐஓசி நிறுவனம், அவசரமாக 15 ஆயிரம் தொன் பெற்றோலை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

சிறிலங்காவின் கடப்பாடுகளை நிறைவேற்ற அமெரிக்கா உதவும் – கூட்டறிக்கையில் தெரிவிப்பு

நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் உள்ளிட்ட கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கு சிறிலங்காவுக்கு ஆதரவளிப்பதாக அமெரிக்கா, தெரிவித்துள்ளது.

சிறிலங்கா கடற்படைக்கு போர்க்கப்பலை வழங்குகிறது அமெரிக்கா

அமெரிக்க கடலோரக்காவல் படையின் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்ட போர்க்கப்பல் ஒன்றை சிறிலங்கா கடற்படைக்கு அமெரிக்கா வழங்கவுள்ளது.