மேலும்

மாதம்: August 2017

அனுராதபுர சிறையில் இரண்டாவது நாளாகவும் அரசியல் கைதிகள் உண்ணாவிரதம்

அனுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மூவர் நேற்று இரண்டாவது நாளாகவும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

திருகோணமலை மீது இந்தியா, ஜப்பான் ஆர்வம்

திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதில் இந்தியாவும், ஜப்பானும் ஆர்வம் காட்டி வருவதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

‘தமிழர் தளம்’ – தாயகத்தில் இருந்து வெளிவரும் புதிய ‘மாதமிருமுறை இதழ்’

தமிழர் தளம் எனும் பெயரில் தாயகத்திலிருந்து புதிய ‘மாதமிருமுறை இதழ்’ வெளிவர ஆரம்பித்துள்ளது.  இதன் முதலாவது இதழ், கடந்த 20.08.17 அன்று நல்லூர் தேர்த்திருவிழாவில் பங்கேற்ற பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் இலவசமாக விநியோகிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் கடன்பொறி – சிறிலங்கா முன் உள்ள சமநிலை சவால்

அண்மையில் சிறிலங்கா அரசாங்கம், சீன அரசிற்குச் சொந்தமான  China Merchants Port Holdings Company Limited (CMPort) நிறுவனத்துடன்  அம்பாந்தோட்டைத் துறைமுகம் தொடர்பான  சலுகை ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டது.  இந்த உடன்படிக்கையின் பிரகாரம், அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் 70 சதவீத உரிமை சீன நிறுவனத்திற்கு வழங்கப்படுவதுடன் சிறிலங்கா துறைமுக அதிகாரசபைக்கு மீதிப் பங்கு உரிமையாக வழங்கப்படுகிறது.

உயிர் துறப்பதற்கு வேலூர் சிறையில் நான்காவது நாளாக உண்ணாவிரதம் இருக்கும் முருகன்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனையை அனுபவித்து வரும் முருகன், உயிர் துறப்பதற்காக இன்று நான்காவது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

வைஸ் அட்மிரல் சின்னையாவினால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் – தேசிய சுதந்திர முன்னணி

வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா, சிறிலங்கா கடற்படைத் தளபதியாக நியமிக்கப்படுவது, நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்று தேசிய சுதந்திர முன்னணி எச்சரித்துள்ளது.

வட மாகாணசபை அமைச்சர் டெனீஸ்வரனை கட்சியில் இருந்து இடைநிறுத்தியது ரெலோ

அமைச்சர் பதவியில் இருந்து விலக மறுத்து வரும், வடக்கு மாகாண போக்குவரத்து மற்றும் மீன்பிடி அமைச்சர் டெனீஸ்வரனை, தமது கட்சியில் இருந்து ஆறு மாதங்களுக்கு இடை நிறுத்தி வைப்பதாக, தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) அறிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் தேடுதல் – 27 இந்தியர்கள் கைது

யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்தப்பட்ட தேடுதலின் போது, நுழைவிசைவு விதிமுறைகளை மீறி தங்கியிருந்த 27 இந்தியர்களை சிறிலங்காவின் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

அமைச்சர் பதவியில் இருந்து விலகமாட்டேன்- விஜேதாச ராஜபக்ச

நீதி மற்றும் பௌத்த சாசன அமைச்சர் பதவியில் இருந்து தாம் விலகப் போவதில்லை என்று விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

20 ஆயிரம் பேருக்கு விரைவில் அபிவிருத்தி உதவியாளர்களாக நியமனம்

தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சினால், அபிவிருத்தி உதவியாளர்களாக 20 ஆயிரம் பேர் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.