மேலும்

மாதம்: August 2017

மாகாணசபைகள் கலைக்கப்பட்ட பின்னர் மேற்பார்வை அரசு – விக்னேஸ்வரன் யோசனை

20 ஆவது திருத்தச்சட்ட வரைவு நிறைவேற்றப்பட்டு, அதன் கீழ் மாகாணசபைகள் கலைக்கப்பட்டால், அதன் பின்னர் மாகாணங்களில் மேற்பார்வை அரசு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரி கொழும்பு வருகிறார்

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசியாவுக்கான  பதில் உதவிச் செயலர் அலிஸ் வெல்ஸ் இந்தவாரம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

கொழும்பில் நாளை தொடங்குகிறது சிறிலங்கா இராணுவத்தின் பாதுகாப்பு கருத்தரங்கு

சிறிலங்கா இராணுவம் ஆண்டு தோறும் நடத்தும் கொழும்பு பாதுகாப்புக் கருத்தரங்கு நாளை ஆரம்பமாகவுள்ளது. கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நாளை தொடங்கவுள்ள இந்தக் கருத்தரங்கு இரண்டு நாட்கள் நடைபெறும்.

சிறிலங்காவில் சீனாவின் தலையீடுகள் அதிகரிப்பு- இந்திய இராணுவத் தளபதி கவலை

பிராந்திய பாதுகாப்புச் சூழலில் சீனா தனது தலையீட்டை தொடர்ந்தும் வலுப்படுத்தி வருவதாக இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் குற்றம்சாட்டியுள்ளார்.

சிறிலங்கா அதிபரின் கையில் சட்டமா அதிபர் திணைக்களம்?

சட்டமா அதிபர் திணைக்களத்தை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, தனது நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவுள்ளார் என்று, கொழும்பு அரசியல் வட்டாரங்களில் நேற்று பரபரப்பாகப் பேசப்பட்டதாக, ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட அரச அதிகாரிகளுக்கான கட்டுப்பாடு தளர்வு – கள அதிகாரிக்கு தடை

அரச சேவையில் உள்ள களப்பணியாற்றும் அதிகாரிகள் மாத்திரமே, உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆசிரியர்களுக்கு இந்த கட்டுப்பாடு பொருந்தாது என்றும் சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

20 ஆவது திருத்தச்சட்ட வரைவு – பொதுவாக்கெடுப்புக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றில் மனு

சிறிலங்கா அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட வரைவுக்கு எதிராக – கூட்டு எதிரணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களாக பேராசிரியர் ஜி.எல்.பீரிசும், உதய கம்மன்பிலவும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

கிளிநொச்சியில் சிறிலங்கா இராணுவத்தினர் மீது வாள்வெட்டு – 6 பேர் கைது

கிளிநொச்சி – ஊற்றுப்புலம் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தில் பணியாற்றும் தமிழர்களான இரண்டு சிப்பாய்கள் மீது, நேற்றுமுன்தினம் இரவு வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

உள்ளூராட்சித் தேர்தல் திருத்தச்சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது

உள்ளூராட்சித் தேர்தல் திருத்தச்சட்டம் நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் எதிர்ப்புகளின்றி நிறைவேற்றப்பட்டது. புதிய உள்ளூராட்சித் தேர்தல் முறை தெரிவு முறைகளுடன், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட உள்ளூராட்சித் தேர்தல் திருத்தச்சட்டம் நேற்று வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.

சிறிலங்காவின் நீதி அமைச்சராகப் பொறுப்பேற்றார் தலதா அத்துகோரள

சிறிலங்காவின் நீதி அமைச்சராக தலதா அத்துகோரள நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் புத்தசாசன அமைச்சராக காமினி ஜெயவிக்கிரம பெரேரோ பொறுப்பேற்றுள்ளார்.