மேலும்

கொழும்பில் நாளை தொடங்குகிறது சிறிலங்கா இராணுவத்தின் பாதுகாப்பு கருத்தரங்கு

defence seminar-2017சிறிலங்கா இராணுவம் ஆண்டு தோறும் நடத்தும் கொழும்பு பாதுகாப்புக் கருத்தரங்கு நாளை ஆரம்பமாகவுள்ளது. கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நாளை தொடங்கவுள்ள இந்தக் கருத்தரங்கு இரண்டு நாட்கள் நடைபெறும்.

‘வன்முறை தீவிரவாதத்தை எதிர்கொள்ளல் – உலகளாவிய போக்குகள்’ என்ற தொனிப்பொருளில் இந்த ஆண்டுக்கான கருத்தரங்கு இடம்பெறவுள்ளது.

இதில்  வெளிநாட்டைச் சேர்ந்த 12 மற்றும் உள்நாட்டைச் சேர்ந்த 15 புலமையாளர்கள் உரையாற்றவுள்ளனர் என்பதுடன்,  200 வெளிநாட்டுப் பிரதிநிதிகள் உள்ளிட்ட 800 பேர் பங்கேற்கவுள்ளனர்.

சிறிலங்காவில் உள்ள 10 நாடுகளில் வெளிநாட்டு ஆலோசகர்களும், இந்தியாவில் இருந்து வரும் 22 நாடுகளில் பாதுகாப்பு ஆலோசகர்களும், 42 வெளிநாட்டு இராணுவ பிரதிநிதிகள் குழுக்களும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனர்.

சார்க் நாடுகளின் அனைத்து இராணுவத் தலைமை அதிகாரிகளும் இந்தப் பாதுகாப்புக் கருத்தரங்கில் பங்கேற்கவுள்ளனர்.

சிறிலங்காவில் இந்திய அமைதிப்படையில் பணியாற்றிய, இந்திய இராணுவத்தின் ஓய்வுபெற்றமூத்த அதிகாரியான மேஜர் ஜெனரல் அசோக் மேத்தா முக்கிய உரை ஆற்றவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *