மேலும்

மாதம்: August 2017

20 ஆவது திருத்தச்சட்ட வரைவுக்கு எதிராக உச்சநீதிமன்றில் 10 மனுக்கள்

சிறிலங்கா அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்த வரைவுக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் 10 மனுக்களைத் தாக்கல் செய்ய அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் திட்டமிட்டுள்ளன.

மகிந்த குடும்பத்துக்கு எதிரான விசாரணைகளை தீவிரப்படுத்த சிறிலங்கா அரசாங்கம் முடிவு

மகிந்த ராஜபக்ச குடும்பத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பூகோள புலனாய்வு அமைப்புகளின் விளையாட்டுக் களமாகும் சிறிலங்கா

இந்திய மாக்கடலில் சீனா தனது கடல் போக்குவரத்தைப் பாதுகாப்பதற்கும் ஆபிரிக்காவுடனான வளர்ந்து வரும் தனது வர்த்தகத்தை உறுதிப்படுத்தவும் தடங்கலுமற்ற பெற்றோலிய வழங்கலை உறுதிப்படுத்துவதற்கும் சீனாவிற்கு அம்பாந்தோட்டைத் துறைமுகம் தேவைப்படுகிறது.

எல்லா சம்பவங்களுக்கும் புலிகளை அடையாளப்படுத்த முடியாது- சிறிலங்கா இராணுவத் தளபதி

வடக்கில் நடக்கின்ற எல்லா சம்பவங்களுக்கும் விடுதலைப் புலிகளே காரணம் என்று அடையாளப்படுத்துவது முற்றிலும் தவறானது என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனவரியில் தனித்து ஆட்சியமைக்கத் தயாராகிறது ஐதேக – உடைகிறது கூட்டு அரசு?

அடுத்த ஆண்டில், கூட்டு அரசாங்கத்தில் இருந்து வெளியேறி தனித்து ஆட்சி அமைப்பது குறித்து, ஐக்கிய தேசியக் கட்சி ஆலோசித்து வருவதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஆவா குழுவுடன் தொடர்பில்லை – சிறீதரனின் குற்றச்சாட்டை நிராகரிக்கும் சிறிலங்கா இராணுவம்

வடக்கில் செயற்படும் ஆவா போன்ற குழுக்களுடன் சிறிலங்கா இராணுவத்துக்கு தொடர்பு இருப்பதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனிவிரத்ன நிராகரித்துள்ளார்.

20 ஆவது திருத்தச்சட்ட வரைவு – மைத்திரியின் முடிவை மாற்றிய மகிந்தவின் கடிதம்

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்ட வரைவுக்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி எதிர்ப்பை வெளியிட்டமைக்கு, சிறிலங்கா தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய எழுதிய கடிதமே காரணமாக இருந்தது என்று கூறப்படுகிறது.

சுதந்திரக் கட்சியில் இருந்து வெளியேறுகிறார் மகிந்த – சிறிலங்கா பொதுஜன பெரமுனவில் இணைகிறார்

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 22 நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.

சாகல ரத்நாயக்கவுக்கு வெளிவிவகார அமைச்சர் பதவி?

சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் பதவிக்கு, சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்கவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவில் விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டது

இந்தோனேசியாவின் சுமாத்ரா தீவுக்கு அருகே இன்று காலை ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தை அடுத்து, சிறிலங்காவின் கரையோரப் பகுதிகளுக்கு விடுக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.