மேலும்

ஆவா குழுவுடன் தொடர்பில்லை – சிறீதரனின் குற்றச்சாட்டை நிராகரிக்கும் சிறிலங்கா இராணுவம்

Brig. Roshan Seniviratneவடக்கில் செயற்படும் ஆவா போன்ற குழுக்களுடன் சிறிலங்கா இராணுவத்துக்கு தொடர்பு இருப்பதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனிவிரத்ன நிராகரித்துள்ளார்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் கடந்த புதன்கிழமை உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் சிறீதரன், யாழ்ப்பாணத்தில் இயங்கும் ஆவா போன்ற குற்றக் குழுக்கள், சிறிலங்கா படைகளுடன் இணைந்தே செயற்படுகின்றன என்று குற்றம்சாட்டியிருந்தார்.

இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனிவிரத்ன,

”இதுபோன்ற குழுக்களை உருவாக்க வேண்டிய தேவை ஆயுதப்படைகளுக்கு கிடையாது.

சட்டம் ஒழுங்கை பேணுவது ஏனைய நிறுவனங்களின் நடவடிக்கையாகும்.

இது முற்றியும் பொய்யான குற்றச்சாட்டு. இந்தக் குழுக்களுடன் நாங்கள் எந்த தொடர்புகளையும் கொண்டிருக்கவில்லை.” என்று கூறியுள்ளார்.

sritharan (1)”2009 ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த பின்னர், சிறிலங்கா படையினரே தமது நிகழ்ச்சி நிரலுக்காக இந்த குற்றக் குழுக்களை உருவாக்கினார்கள். இப்போது பயங்கரவாதத்தின் நிழல் இப்போது நாட்டைச் சூழ்வது போன்ற கருத்து உருவாக்கப்பட்டுள்ளது.

அவர்கள் சிறிலங்கா படையினருடன் இணைந்தே செயற்படுகின்றனர். தம்முடன் இணைந்து செயற்படுபவர்களை இவர்களால் ஏன் கட்டுப்படுத்த முடியாமல் உள்ளது. அரசாங்கம் இந்த விடயத்தில் உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” – நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன்

அதேவேளை, இந்தக் குழுக்களின் மூலம் விசாரணைகளின் மூலம் வெளிப்படும் என்று சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் ருவான் குணசேகர கூறியுள்ளார்.

இதனிடையே வடக்கில் சட்டவிரோத மண் அகழ்வு போதைப்பொருள் கடத்தலை தடுப்பதற்கு, கடலோரக் காவல் படையினருடன் இணைந்து, கண்காணிப்பை தீவிரப்படுத்தியிருப்பதாக, சிறிலங்கா கடற்படை பேச்சாளர் லெப்.கொமாண்டர் சமிந்த வலகுலுகே தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *