மேலும்

மாதம்: August 2017

கைவிடப்படுகிறது 20 ஆவது திருத்தச்சட்டம் – நொவம்பரில் 3 மாகாணசபைகளுக்கு தேர்தல்

சிறிலங்கா அரசாங்கத்தினால் அண்மையில வர்த்தமானியில் வெளியிடப்பட்ட அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்ட வரைவு, கைவிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் செயற்பாடுகள் தீவிரம்

யாழ்ப்பாணக் குடாநாட்டில் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளும் நோக்கில், சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்று சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நேபாளத்தில் சுஸ்மா – வசந்த சேனநாயக்க சந்தித்துப் பேச்சு

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜூடன் சிறிலங்காவின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வசந்த சேனநாயக்க நேபாளத்தில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.

சிறிலங்கா வெளிவிவகார செயலராக நாளை மறுநாள் பதவியேற்கிறார் பிரசாத் காரியவசம்

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் செயலராக பிரசாத் காரியவசம், நாளை மறுநாள் பதவியேற்கவுள்ளார். அதேநாளில்,தற்போது வெளிவிவகார அமைச்சின் செயலராக உள்ள எசல வீரக்கோன், சுற்றுலா அபிவிருத்தி அமைச்சின் செயலராக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வடக்கின் நிலைமைகளை பார்வையிட வருகிறார் அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர்

வடக்கின் நிலைமைகளை நேரில் கண்டறிவதற்காக அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் இம்மாத இறுதியில் யாழ்ப்பாணத்துக்கான பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.

20 ஆவது திருத்தச்சட்ட வரைவுக்கு சுதந்திரக் கட்சி எதிர்ப்பு

2019ஆம் ஆண்டு வரையில் மாகாணசபைத் தேர்தல்களை பிற்போடுவதற்கு வழி செய்யும் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச்சட்ட வரைவுக்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் கரன்னகொட அடுத்த சில நாட்களில் கைது?

சிறிலங்கா கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட அடுத்த சில நாட்களுக்குள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்படவுள்ளார் என்று ராவய வாரஇதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

20 ஆவது திருத்தச்சட்ட வரைவை கூட்டமைப்பு ஆதரிக்காது – சுமந்திரன்

அரசாங்கத்தினால்  முன்வைக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்ட வரைவின் தற்போதைய வடிவத்துக்கு எந்தவொரு சூழ்நிலையிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு அளிக்காது என்று கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பதவியில் இருந்து விஜேதாச ராஜபக்ச நீக்கப்படுவார்?

நீதி மற்றும் பௌத்த சாசன அமைச்சர் பதவியில் இருந்து விஜேதாச ராஜபக்சவை நீக்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் கோருவதற்கு, ஐக்கிய தேசியக் கட்சி தலைமைப்பீடம் முடிவு செய்திருப்பதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

லொத்தர் சபைகளை பொறுப்பேற்க மாரப்பன மறுப்பு

சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சராகப் பதவியேற்க திலக் மாரப்பன இணங்கியுள்ளதாகவும், எனினும், அவர் தேசிய லொத்தர் சபை மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபை என்பனவற்றைப் பொறுப்பேற்க மறுத்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.