மேலும்

மாதம்: August 2017

சிறிலங்காவின் பாதுகாப்பில் இந்தியாவுக்கு அக்கறை – இந்தியத் தூதுவர்

சிறிலங்காவின் பாதுகாப்பின் மீது இந்தியா அக்கறை கொண்டிருப்பதாக சிறிலங்காவுக்கான இந்திய தூதுவர் தரன்ஜித் சிங் சந்து தெரிவித்துள்ளார்.

வடக்கு சம்பவங்களுக்கு முன்னாள் போராளிகள் காரணமில்லை – சிறிலங்கா இராணுவத் தளபதி

வடக்கில் அண்மையில் சிறிலங்கா காவல்துறையினர் மற்றும் மேல் நீதிமன்ற நீதிபதி ஆகியோருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் உள்ளூர் விவகாரங்களாகும். இதனால் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

‘எனக்கு ஒன்றும் தெரியாது’ – இரண்டரை மணிநேர விசாரணையில் சிராந்தியின் பதில்

ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூதீன் கொலை தொடர்பாக, சிறிலங்காவின் முன்னாள் முதற்பெண்மணி, சிராந்தி ராஜபக்சவிடம் எழுப்பப்பட்ட பெரும்பாலான கேள்விகளுக்கு அவர் ஒன்றும் தெரியாது என்றே பதிலளித்தார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொக்குவிலில் சிக்கியவர் ஆவா குழுவின் துணைத் தலைவராம்

கொக்குவிலில் நேற்றுக்காலை சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்ட இளைஞன், ஆவா குழுவின் துணைத் தலைவராகச் செயற்பட்டவர் என்று சிறிலங்கா காவல்துறை வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

விஜேதாசவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை – 70 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு

சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் இதுவரை 70 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகிந்த குடும்பத்துக்கு எதிரான விசாரணைகளை தீவிரப்படுத்துமாறு அமைச்சரவையில் அழுத்தம்

மகிந்த ராஜபக்ச குடும்பத்தினர் மற்றும் முன்னைய அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையில், தேவையற்ற இழுத்தடிப்புகள் மேற்கொள்ளப்படுவதாக, நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் காரசாரமான கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

கொக்குவில் வாள்வெட்டு – மற்றொரு இளைஞன் சிறிலங்கா அதிரடிப்படையால் கைது

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்று குற்றச்சாட்டில், ஆவா குழுவின் உறுப்பினர் என்று சந்தேகிக்கப்படும் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.

சிறிலங்காவின் புதிய வெளிவிவகார அமைச்சராக பதவியேற்றார் திலக் மாரப்பன

சிறிலங்காவின் புதிய வெளிவிவகார அமைச்சராக, திலக் மாரப்பன இன்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்பாக பதவியேற்றுக் கொண்டார்.

ஆவா குழு உறுப்பினர்களை வேறு சிறைகளுக்கு மாற்ற அனுமதி கோருகிறது சிறிலங்கா காவல்துறை

யாழ்ப்பாணம், சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, ஆவா குழு உறுப்பினர்கள் என்று சந்தேகிக்கப்படுவோரை, ஏனைய சிறைச்சாலைகளுக்கு மாற்றுவதற்கு, சிறிலங்கா காவல்துறை நீதிமன்ற அனுமதியைக் கோரியுள்ளது.

சிராந்தி, யோசித, றோகிதவிடம் இன்றும் நாளையும் விசாரணை- ராஜபக்ச குடும்பம் நெருக்கடியில்

ரக்பி விளையாட்டு வீரர், வசீம் தாஜூதீன் கொலை தொடர்பான விசாரணைகளுக்காக, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் மனைவியான சிராந்தி ராஜபக்சவும், அவரது மகன் யோசித ராஜபக்சவும் இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவு தலைமையகத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.