மேலும்

சிறிலங்காவின் புதிய வெளிவிவகார அமைச்சராக பதவியேற்றார் திலக் மாரப்பன

tilak marappana-MFAசிறிலங்காவின் புதிய வெளிவிவகார அமைச்சராக, திலக் மாரப்பன இன்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்பாக பதவியேற்றுக் கொண்டார்.

வெளிவிவகார அமைச்சராக இருந்த ரவி கருணாநாயக்க தனது பதவியை விட்டு கடந்தவாரம் விலகியதை அடுத்து, புதிய வெளிவிவகார அமைச்சராக திலக் மாரப்பன நியமிக்கப்பட்டுள்ளார்.

அதிபர் செயலகத்தில் இன்று முற்பல் நடந்த நிகழ்வில் அவர் தனது பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

இவர் ஏற்கனவே சிறிலங்கா அமைச்சரவையில் அபிவிருத்திப் பணிகள் அமைச்சராகப் பணியாற்றிய வந்தராவார்.

tilak marappana-MFA

prasad kariyawasam

அதேவேளை, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் செயலராக, பிரசாத் காரியவசமும் இன்று தனது பதவியைப் பொறுப்பேற்றார்.

வெளிவிவகாரச் செயலராக இருந்த எசல வீரக்கோன், சுற்றுலா அபிவிருத்தி அமைச்சின் செயலராக நியமிக்கப்பட்டதை அடுத்து, அமெரிக்க தூதுவராகப் பணியாற்றிய பிரசாத் காரியவசம், வெளிவிவகாரச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *