மேலும்

மாதம்: May 2017

சென்னையில் காவல்துறையின் தடையை மீறி ஈழத்தமிழர் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு

சென்னை மெரினா கடற்கரையில், காவல்துறையினரின் தடையை மீறி நேற்றுமாலை ஈழத்தமிழர் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

இன்று கைது செய்யப்படுகிறார் ஞானசார தேரர்?

சிறுபான்மையினருக்கு எதிரான இனவாத செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள பொது பலசேனா அமைப்பின் பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரர் இன்று கைது செய்யப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்காவின் குருதி தோய்ந்த உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து எட்டு ஆண்டுகள்

சிறிலங்காவில் நடந்து முடிந்த முடிந்த குருதி தோய்ந்த உள்நாட்டு யுத்தத்தின் எட்டாவது ஆண்டு கடந்த வெள்ளியன்று நிறைவடைந்தது. இந்த யுத்தத்தின் போது காணாமற் போன உறவுகளை இவர்களின் குடும்பத்தவர்கள் தேடிக்கொண்டிருக்கும் அதேவேளையில் இராணுவ ஆக்கிரமிப்பிற்குள் உள்ள தமது நிலங்களை விடுவிக்குமாறும் தமிழ் மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஜேர்மனிக்கான தூதுவராகிறார் கருணாசேன ஹெற்றியாராச்சி

ஜேர்மனிக்கான சிறிலங்காவின் புதிய தூதுவராக பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி நியமிக்கப்படவுள்ளார். ஜேர்மனியில் உள்ள சிறிலங்கா தூதுவர் கருணாதிலக அமுனுகம பதவியில் இருந்து ஓய்வுபெறவுள்ள நிலையிலேயே, கருணாசேன ஹெற்றியாராச்சி அந்தப் பதவியைப் பொறுப்பேற்கவுள்ளார்.

கொழும்புத் துறைமுகத்தில் இந்தியக் கடற்படையின் சுமேதா போர்க்கப்பல்

இந்திய கடற்படையின் ஆழ்கடல் ரோந்துக் கப்பலான ஐஎன்எஸ் சுமேதா மூன்று நாள்கள் பயணமாக நேற்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இன்று காலை அமைச்சரவை மாற்றம் – மங்கள, ரவியின் பதவிகள் பறிப்பு?

சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இன்று காலை அமைச்சரவை மாற்றம் இடம்பெறவுள்ளது. இதன் போது நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் இப்போது வகித்து வரும் அமைச்சுப் பதவிகளை இழக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கி்ன்றன.

குருநாகலில் பள்ளிவாசல் மீது குண்டுத் தாக்குதல் – அமெரிக்கா கண்டனம்

குருநாகல் – மல்லவப்பிட்டியவில்  முஸ்லிம்களின் பள்ளிவாசல் மீது இன்று அதிகாலையில் இனந்தெரியாத நபர்களால் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

செவ்வாயன்று அவுஸ்ரேலியா புறப்படுகிறார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வரும் செவ்வாய்க்கிழமை அவுஸ்ரேலியாவுக்கு அரசுமுறைப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். சிறிலங்கா அதிபர் ஒருவர், அவுஸ்ரேலியாவுக்கு அரசுமுறைப் பயணத்தை மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும்.

கொழும்பிலா- யாழ்ப்பாணத்திலா விசாரணை? – வித்தியா கொலை வழக்கில் இழுபறி

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை தொடர்பாக ட்ரயல் அட்பார் விசாரணையை நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இந்த விசாரணையை கொழும்பிலா யாழ்ப்பாணத்திலா நடத்துவது என்பது தொடர்பாக முடிவெடுப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளதால், இந்த விசாரணைகள் தாமதமடைந்துள்ளன.

புதிய அரசியலமைப்பு தாமதிக்கப்படாது – மோடியிடம் வாக்குறுதி கொடுத்த சிறிலங்கா தலைவர்கள்

புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணிகளில் தாமதம் ஏற்படாது என்று தாம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும், உலகத் தலைவர்களுக்கும் உறுதி அளித்திருப்பதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.