மேலும்

அமைச்சரவை இணைப்பேச்சாளராக தயாசிறி ஜெயசேகர?

Dayasiri Jayasekaraசிறிலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் அமைச்சரவை இணைப் பேச்சாளராக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகர நியமிக்கப்படவுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சரவை இணைப்பேச்சாளராக தயாசிறி ஜெயசேகரவை நியமிப்பதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் இணங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

எனினும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான அதிபர் மைத்திரிபால சிறிசேனவே இதுபற்றிய அதிகாரபூர்வ முடிவை எடுப்பார் என்று தெரியவருகிறது.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் இது தொடர்பாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் வலியுறுத்தியிருந்தனர்.

சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சரவை இணைப்பேச்சாளர்களாக ராஜித சேனாரத்ன மற்றும் கயந்த கருணாதிலக ஆகியோர் இருக்கின்றனர்.

சரத் பொன்சேகாவுக்கு பாதுகாப்புத் துறையில் உயர் பதவி வழங்கவுள்ளதாக சிறிலங்கா அதிபர் அமைச்சரவைக் கூட்டத்தில் அறிவித்திருந்தார் என்று அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன வெளியிட்ட தகவலை அடுத்து, அவருக்கு எதிராக சுதந்திரக் கட்சியினர் போர்க்கொடி தூக்கியிருந்தனர்.

இந்த நிலையில் சுதந்திரக் கட்சி சார்பிலும் ஒருவரை அமைச்சரவை இணைப் பேச்சாளராக நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *