மேலும்

அவசர உதவிப் பொருட்களை வழங்கினார் இஸ்ரேலிய தூதுவர்

israel-amb-raviசிறிலங்காவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இஸ்ரேல் அவசர உதவிப் பொருட்களை வழங்கியுள்ளது. சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவை இன்று சந்தித்த இஸ்ரேலிய தூதுவர் டானியல் கார்மன் இந்த உதவிப் பொருட்களைக் கையளித்தார்.

மின்பிறப்பாக்கிகள், குடிநீர், விளக்குகள் உள்ளிட்ட உதவிப் பொருட்களை இஸ்ரேல் வழங்கியுள்ளது.

அதேவேளை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிங்கப்பூர் ஒன்றரை இலட்சம் டொலர் பெறுமதியான உதவிப் பொருட்களை வழங்குவதாக அறிவித்துள்ளது.

israel-amb-ravi

அவுஸ்ரேலியா 5 இலட்சம் டொலர் பெறுமதியான உதவிப் பொருட்களை வழங்குவதாக அறிவித்துள்ளது. இவற்றில் மீட்புப் பணிகளுக்குத் தேவைப்படும் மிதவைப் படகுகள், மற்றும் வெளியிணைப்பு இயந்திரங்களும் அடங்கியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *