மேலும்

2016 இல் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

jaffna-university-convocation-2017-6சிறிலங்காவில் 2016ஆம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட பீடங்கள் மற்றும் திணைக்களங்களின் மூலம், பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 28,952 ஆக அதிகரித்துள்ளதாக சிறிலங்கா மத்திய வங்கியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டில் பல்கலைக்கழகங்களுக்கு 25,676 மாணவர்கள் உள்வாங்கப்பட்டனர். இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு 28,952 ஆக அதிகரித்தது.

அதேவேளை, பல்கலைக்கழகங்களில் கற்றுக் கொண்டிருந்த மாணவர்களின் எண்ணிக்கை 2015இல்  83,778 ஆக இருந்தது. இது, 2016இல், 86,061 ஆக அதிகரித்துள்ளது.

அரச பல்கலைக்கழகங்களில் கடந்த ஆண்டில் புதிதாக 9  பீடங்களும், 34 புதிய திணைக்களங்களும், 3 நிலையங்களும் உருவாக்கப்பட்டன.

இந்தக் காலகட்டத்தில் 38 பட்டக்கற்கைநெறிகள் மற்றும் 15 பட்ட பின் படிப்புக் கற்கைநெறிகளுக்கும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அனுமதி அளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *