சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க நியமனம்
சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரியாக, யாழ்.படைகளின் தலைமையக கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரியாக, யாழ்.படைகளின் தலைமையக கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சிறிலங்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்திக் கொள்வதற்கு சிறிலங்கா அதிபரும், சீன பாதுகாப்பு அமைச்சரும் இணங்கியுள்ளனர் என்று சீனாவின் சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80 வீதப் பங்குகளை சீனாவுக்கு குத்தகைக்கு வழங்குவதற்கும், அதனையொட்டியதாக கைத்தொழில் வலயம் ஒன்றை அமைப்பதற்கும் சீன நிறுவனத்துடன் செய்து கொள்ளப்படும் உடன்பாட்டுக்கு சிறிலங்கா அமைச்சரவை நேற்று அனுமதி அளித்துள்ளது.
அமெரிக்காவுடன் பாதுகாப்பு உடன்பாட்டை புதுப்பித்துக் கொள்வது தொடர்பான சிறிலங்காவின் நிலைப்பாடு நாடாளுமன்றத்தில் வெளியிடப்படும் என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஜெனிவாவில் நடந்து வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடரில் இன்று சிறிலங்கா குறித்த விவாதம் இடம்பெறவுள்ளது.
வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்டு விசாரணைகளை நடத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் ஜெனிவாவில் இணங்கவில்லை என்றும், வெளிநாட்டு நீதிபதிகள், வழக்குத்தொடுனர்களின் ஆலோசனையைப் பெறுவதற்கே அரசாங்கம் இணங்கியது என்றும் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைச் சபையில் சிறிலங்காவுக்கு காலஅவகாசம் வழங்கும் தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு அளிக்கக் கூடாது என்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் சிறிலங்கா இணைந்து கொள்ளாது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
பிம்ஸ்ரெக் எனப்படும், வங்காள விரிகுடா நாடுகளின், பலதுறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களின் முதல் கூட்டம் இன்று புதுடெல்லியில் இடம்பெறுகிறது.
இரகசிய மரணப் படை ஒன்றை இயக்கி ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்கள் மீது தாக்குதல் நடத்தினார் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டை, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச நிராகரித்துள்ளார்.