மேலும்

நாள்: 3rd March 2017

சிறிலங்காவை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்- ஐ.நா, உறுப்பு நாடுகளுக்கு ஆணையாளர் பரிந்துரை

சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும், நிலைமாறுகால நீதிப் பொறிமுறைகளை செயற்படுத்துவதற்கான உதவிகளை வழங்க வேண்டும் என்றும், ஐ.நாவுக்கும், ஐ.நா மனித உரிமைகள் பேரவை உறுப்பு நாடுகளுக்கும் ஐ.நா மனித உரிமை ஆணையாளரால் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

வெளியானது ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை – சிறிலங்காவுக்கான பரிந்துரைகள்

சிறிலங்கா தொடர்பான ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை ஜெனிவாவில்  சற்று முன்னர் வெளியாகியுள்ளது.  2015ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா என்பது பற்றி விளக்கும் வகையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

கலப்பு நீதிமன்றத்தை அமைக்க பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் – ரணில்

கலப்பு நீதிமன்றத்தை அமைப்பது அரசியல் ரீதியாகச் சாத்தியமற்றது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறுகூறியுள்ளார்.

சொந்த நிலத்துக்காகப் போராடும் தமிழ் மக்கள்

நான் இங்கு இரவில் நித்திரை கொள்ளும் போது எனது வீட்டில் இருப்பது போல் கற்பனை செய்து கொள்வேன்’ என புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு வெளியே தங்கியுள்ள 83 வயதான சிங்கரத்தினம் செல்லம்மா கூறினார்.

அம்பாந்தோட்டை நோக்கி விரையும் அமெரிக்க கடற்படையின் அதிவேக கப்பல்

அமெரிக்க கடற்படையின் அதிவேகப் போக்குவரத்துக் கப்பலான ‘யுஎஸ்என்எஸ் போல் ரிவர்’ (USNS Fall River) சிறிலங்காவின் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை நோக்கிப் பயணத்தை ஆரம்பித்திருக்கிறது.

மாணவர்கள் கடத்திக் கொலை – சிறிலங்கா கடற்படை அதிகாரிகள் இருவர் கைது

கொழும்பில் ஆறு மாணவர்களைக் கடத்தி கப்பம் கோரி, கொலை செய்தார்கள் என்ற குற்றச்சாட்டில், சிறிலங்கா கடற்படை அதிகாரிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கனடிய உயர்மட்ட அதிகாரிகள் சிறிலங்காவில் – சம்பந்தனையும் சந்திப்பு

கனடாவின் பூகோள விவகாரங்களுக்கான திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவொன்று சிறிலங்காவுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ளது.

அமெரிக்காவே தீர்மானத்தை முன்வைக்கிறது – இணை அனுசரணை வழங்குகிறது சிறிலங்கா

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இம்முறையும் சிறிலங்கா தொடர்பான தீர்மானத்தை அமெரிக்காவே முன்வைக்கவுள்ளதாகவும், இதற்கு சிறிலங்கா இணை அனுசரணை வழங்கும் என்றும் சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.

வெளிநாட்டு நீதிபதிகளை அழைக்கமாட்டேன் – சிறிலங்கா அதிபர் திட்டவட்ட அறிவிப்பு

மனித உரிமை மீறல்கள் தொடர்பான உள்நாட்டு விசாரணைகளில் வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமளிக்கப்படாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.