மேலும்

நாள்: 11th March 2017

தமிழ்நாட்டு பக்தர்கள் வராததால் களையிழந்த கச்சதீவு திருவிழா

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா இன்று ஆரம்பமாகியது. இந்தியாவில் இருந்து பக்தர்களோ, குருமாரோ வருகை தராதததால், இந்த திருவிழா களையிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெனிவா தீர்மானத்தை கடும் கண்காணிப்புடன் நடைமுறைப்படுத்தக் கோருகிறது கூட்டமைப்பு

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக சிறிலங்கா நிறைவேற்றுவதை உறுதிப்படுத்துமாறும், அதனைக் கண்காணிக்க சிறிலங்காவில் பணியகம் ஒன்றை நிறுவுமாறும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது.

சிறிலங்காவை வடகொரியாவுடன் ஒப்பிட முடியுமா? – அனைத்துலக ஊடகம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34வது கூட்டத் தொடர் தற்போது இடம்பெற்று வரும் நிலையில், சிறிலங்கா மீதான விவாதம் சூடுபிடித்துள்ளது. இந்த மாத இறுதியில் சிறிலங்கா மீது ஐ.நா மனித உரிமைகள் பேரவையால் பிறிதொரு தீர்மானம் நிறைவேற்றப்படும் நிலை காணப்படுவதுடன், இத்தீர்மானத்திற்கு அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கமானது இணைஅனுசரணை வழங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அம்பாந்தோட்டை துறைமுகத்தினால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் – சிறிலங்காவிடம் இந்தியா கவலை

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிடம் கையளிப்பது குறித்து சிறிலங்காவிடம் இந்தியா கவலை வெளியிட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் கடல்சார் சக்திகளுடன் இணைந்து செயற்பட சிறிலங்கா ஆர்வம்

சமுத்திரங்களில் தடையற்ற வணிகத்தை பாதுகாப்பதற்கும், அமைதியான கடற்பயணங்களை உறுதிப்படுத்துவதற்கும் இந்தியப் பெருங்கடல் மற்றும் அதற்கு அப்பால் கடல்சார் சக்திகளுடன் இணைந்து செயற்பட சிறிலங்கா ஆர்வமாக இருக்கிறது என்று அமெரிக்காவுக்கான சிறிலங்கா தூதுவர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இரண்டு பாகிஸ்தான் போர்க்கப்பல்கள் நாளை கொழும்பு வருகின்றன

பாகிஸ்தான் கடற்படையின் இரண்டு போர்க்கப்பல்கள் நான்கு நாட்கள் நல்லெண்ணப் பயணமாக நாளை கொழும்புத் துறைமுகத்துக்கு வரவுள்ளதாக பாகிஸ்தான் தூதரகம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டார் முன்னாள் விமானப்படைத் தளபதி

ஆப்கானிஸ்தானுக்கான சிறிலங்கா தூதுவராக, சிறிலங்காவின் முன்னாள் விமானப்படைத் தளபதி எயர் சீவ் மார்ஷல் ககன் புலத்சிங்கள பதவியேற்றுள்ளார்.

சிறிலங்காவின் புதிய பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்ன?

சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலராக மூத்த மேலதிக அரச சட்ட ஆலோசகர் கபில வைத்தியரத்ன நியமிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.