மேலும்

நாள்: 13th March 2017

தீர்மான வரைவு ஐ.நா பேரவையில் சமர்ப்பிப்பு – கண்காணிப்பு பணியகம் பற்றி ஏதுமில்லை

சிறிலங்கா தொடர்பான தீர்மான வரைவு இன்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தின் தொடர்ச்சியாக இந்த தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளது.

யாழ். குடாநாட்டு நிலவரங்களை ஆய்வு செய்த இந்திய தூதரக பாதுகாப்பு ஆலோசகர்

கொழும்பில் உள்ள இந்தியத் தூதரக பாதுகாப்பு ஆலோசகராக அண்மையில் பதவியேற்ற கப்டன் அசோக் ராவ், யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குப் பயணம் மேற்கொண்டு அங்குள்ள நிலைமைகள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.

உறுதியான சிறிலங்கா அமெரிக்காவின் நலன்களுக்கு முக்கியம் – பீற்றர் ரொஸ்கம்

உறுதியான ஜனநாயகத்தைக் கொண்ட சிறிலங்கா, அமெரிக்காவின்  தேசிய நலன்களுக்கு முக்கியமானது என்று அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற ஜனநாயக ஒத்துழைப்பு அமைப்பின் தலைவருமான பீற்றர் ரொஸ்கம் தெரிவித்துள்ளார்.

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவில் திருத்தங்கள்- கூட்டமைப்புக்கு வாக்குறுதி

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவு தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டிருந்த சில குறிப்பிட்ட கரிசனைக்குரிய விவகாரங்களுக்குத் தீர்வு காணப்படும் என்று தேசிய பாதுகாப்புத் தொடர்பான மேற்பார்வைக் குழு உறுதியளித்துள்ளது.

அவுஸ்ரேலிய, சிறிலங்கா அரசுகளின் நிலைப்பாடுகளால் ஆபத்தில் சிக்கும் புகலிடக் கோரிக்கையாளர்கள்

அண்மையில் அவுஸ்ரேலியாவிற்குப் பயணம் செய்திருந்த சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அவுஸ்ரேலியாவில் தஞ்சம் புகுந்துள்ள புகலிடக் கோரிக்கையாளர்கள் அனைவரையும் நாடு திரும்புமாறும் அவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படுவதாகவும் அறிவித்திருந்தார்.

புதுடெல்லியில் நாளை ஆரம்பமாகும் தீவிரவாத எதிர்ப்புக் கருத்தரங்கில் ரணில், சம்பந்தன் உரை

புதுடெல்லியில் நாளை ஆரம்பமாகவுள்ள தீவிரவாத எதிர்ப்புக் கருத்தரங்கில், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்டோர் உரையாற்றவுள்ளனர்.

சிறிலங்கா படைகள் தொடர்ந்தும் விலக்களிப்புடன் செயற்படுகின்றன – யஸ்மின் சூகா

சிறிலங்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இரண்டு ஆண்டுகளாகி விட்ட போதிலும், சிறிலங்கா படையினர் விலக்களிப்புடன் தொடர்ந்து செயற்படுவதாக, அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூகா தெரிவித்துள்ளார்.

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை வரையும் பணிகள் நிறைவு

மீளாய்வு செய்யப்பட்ட புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை வரையும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக சிறிலங்கா அரசாங்க வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.