மேலும்

நாள்: 14th March 2017

Aris 13

8 இலங்கை மாலுமிகளுடன் எண்ணெய்க் கப்பல் கடத்தப்பட்டது

சிறிலங்கா மாலுமிகளுடன் இந்தியப் பெருங்கடலில் பயணித்த எண்ணெய்க் கப்பல் ஒன்று சோமாலிய கடற்கொள்ளையர்களினால், கடத்தப்பட்டுள்ளது. இந்தக் கப்பலில் இலங்கை மாலுமிகள் எட்டுப் பேர் இருந்தனர் என்று சிறிலங்கா கடற்படை உறுதிப்படுத்தியுள்ளது.

Izumo helicopter carrier,

ஜப்பானின் இராட்சத நாசகாரி போர்க்கப்பல் சிறிலங்கா வருகிறது

ஜப்பானியக் கடற்படையின் மிகப்பெரிய உலங்குவானூர்தி தாங்கி, நாசகாரிப் போர்கப்பலான இசுமோ, சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

gota-report launch (1)

போர்க்குற்றவாளிகள் இப்போது மனித உரிமை காவலர்களாகி விட்டனர் – என்கிறார் கோத்தா

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான அமெரிக்காவின் தீர்மானத்துக்கு, இணை அனுசரணை வழங்குவது சிறிலங்கா அரசாங்கத்தின் பலவீனம் என்று குற்றம்சாட்டியுள்ளார் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச.

Yun Byung-se

31 ஆண்டுகளுக்குப் பின் சிறிலங்கா வருகிறார் தென்கொரிய வெளிவிவகார அமைச்சர்

தென்கொரிய வெளிவிவகார அமைச்சர் யுன் பயுங் சே நாளை சிறிலங்காவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். தென்கொரியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 40 ஆண்டுகள் நிறைவடைவதையிட்டு அவரது இந்தப் பயணம் அமையவுள்ளது.

maithri

சிறிலங்கா அதிபர் இந்தியா செல்லவில்லை – மறுக்கிறது அவரது செயலகம்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பௌத்த நிகழ்வு ஒன்றில் பங்கேற்பதற்காக இந்தியா செல்வதற்குத் திட்டமிட்டுள்ளார் என்று ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியாகிய செய்தியை சிறிலங்கா அதிபர் செயலகம் நேற்று மறுத்துள்ளது.

ranil

இந்தியத் தூதுவரிடம் சிறிலங்கா கடற்படையை நியாயப்படுத்திய சிறிலங்கா பிரதமர்

பாக்கு நீரிணையில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக, சிறிலங்கா கடற்படையை நியாயப்படுத்தும் வகையில், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங்கிடம் கருத்து வெளியிட்டுள்ளார் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

gavel

சுமந்திரன் கொலை முயற்சி – அவுஸ்ரேலியாவில் உள்ள சந்தேகநபருக்கு அனைத்துலக பிடியாணை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைப் படுகொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சி தொடர்பாக, அவுஸ்ரேலியாவில் வசிக்கும் சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்வதற்கு அனைத்துலக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.