மேலும்

நாள்: 9th March 2017

Zeid-Raad-al-Hussein

சிறிலங்கா விழித்துக் கொள்வதற்கான அழைப்பு – ‘தி ஹிந்து’ ஆசிரியர் தலையங்கம்

சிறிலங்கா அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க முயற்சிகள் தொடர்பான முன்னேற்ற அறிக்கையை கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டமையானது, சிறிலங்காவின் அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் விழித்துக் கொள்வதற்கான அழைப்பாகக் கருதப்பட வேண்டும்.

Sri Lankan fishermen arrested

பதற்றத்தை தணிக்க 85 தமிழ்நாட்டு மீனவர்களை விடுவிக்கிறது சிறிலங்கா

கச்சதீவு அருகே தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து, ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்கும் வகையில், தாம் கைது செய்து தடுத்து வைத்துள்ள மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய சிறிலங்கா, இந்திய அரசுகள் இணக்கம் கண்டுள்ளன.

killing-students

யாழ். மாணவர்கள் கொலை வழக்கை வட-கிழக்கிற்கு வெளியே மாற்றக் கோரி வழக்கு

துப்பாக்கிச் சூடு நடத்தி யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் மரணத்துக்குக் காரணமானவர்கள் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ள, ஐந்து சிறிலங்கா காவல்துறையினரும், தம் மீதான வழக்கை வடக்கு- கிழக்கிற்கு வெளியே மாற்றக் கோரி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

harsha d silva

ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை இறைமையுள்ள நாட்டைக் கட்டுப்படுத்தாது – சிறிலங்கா

ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை இறையாண்மை கொண்ட நாட்டைக் கட்டுப்படுத்தாது என்றும், அவரது அறிக்கையில் உள்ள எல்லா பரிந்துரைகளையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

USNS Fall River (2)

அம்பாந்தோட்டையில் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க கடற்படைக் கப்பல்

அம்பாந்தோட்டையில் போல் ரிவர் என்ற அதிவேக போக்குவரத்துக் கப்பலில் வந்த அமெரிக்க கடற்படையினர், ஜப்பான், அவுஸ்ரேலியா மற்றும் சிறிலங்கா கடற்படை மற்றும் சிவில் அதிகாரிகளுடன் இணைந்து கூட்டுப் பயிற்சியை ஆரம்பித்துள்ளனர்.