மேலும்

நாள்: 12th March 2017

தீர்மான வரைவு குறித்து இந்தியாவுடனும் ஆலோசனை

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படவுள்ள தீர்மான வரைவு குறித்து இந்தியாவுடனும் ஆலோசனைகள் நடத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விசாரணையைச் சந்திக்காமல் ஓடுபவனுக்கு முதுகெலும்பு இல்லை – மைத்திரிக்கு சுமந்திரன் பதிலடி

எந்த விசாரணையையும் சந்திக்க முடியாது என்று ஓடுகிறவன் தனக்கு முதுகெலும்பு இருக்கிறதென்று கூற முடியாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பதிலடி கொடுத்துள்ளார்.

வெளிநாட்டுக் கடன்களை பெறுவதற்கு மூன்று ஆண்டுகளுக்குத் தடை

அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு  எந்தப் புதிய கடனையையும் வாங்குவதை நிறுத்திக் கொள்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்திருப்பதாக சிறிலங்கா நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

வறுமைக்கோட்டுக்குள் உள்ள மாவட்டங்களின் பட்டியலில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

சிறிலங்காவில் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட மாவட்டங்களில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு ஆகியனவும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக சனத்தொகை மற்றும் புள்ளிவிபரங்கள் திணைக்களத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

தீர்மான வரைவை நீர்த்துப்போகச் செய்வதற்கு இந்தியாவின் உதவியை நாடுகிறது சிறிலங்கா

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்படவுள்ள சிறிலங்கா தொடர்பான தொடர்ச்சித் தீர்மான வரைவின் தொனி மற்றும் மொழிநடையை மேலும் நீர்த்துப் போகச் செய்வதற்கான முயற்சிகளில் சிறி்லங்கா அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் இராணுவ செயற்பாடுகளுக்கு தடை

அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பாக சீனாவுடன் செய்து கொள்ளப்படவுள்ள உடன்பாடு, துறைமுகத்தை இராணுவ நோக்கில் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கின்ற வகையில் அமைந்திருப்பதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ரஷ்யா செல்கிறார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மூன்று நாட்கள் அதிகாரபூர்வ பயணமாக ரஷ்யாவுக்குச் செல்லவுள்ளார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் விடுத்த அழைப்பை ஏற்றே சிறிலங்கா அதிபரின் இந்தப் பயணம் இடம்பெறவுள்ளது.