மேலும்

நாள்: 25th March 2017

எந்தவொரு படையினரையும் தண்டிக்கமாட்டோம் – சந்திரிகா

தமது உறவுகள் காணாமல்போக காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்குமாறு அவர்களின் உறவினர்கள் கோரவில்லை, எவ்வாறு காணாமல் போனார்கள் என்ற கேள்விக்கான பதிலையே அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்கு ரஷ்யாவின் ஜிபாட் 3.9 போர்க்கப்பல்கள் – இறுதிக்கட்டத்தில் பேச்சுக்கள்

சிறிலங்காவுக்கு ஜிபாட் 3.9 (Gepard 3.9) ரகத்தைச் சேர்ந்த போர்க்கப்பல்களை வழங்குவது தொடர்பான உடன்பாடு குறித்த பேச்சுக்கள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

சீனாவின் நிதி, நிபுணத்துவ உதவியுடன் ஊடகப் பயிற்சி அகடமி

சிறிலங்காவில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள ஊடக பயிற்சி அகடமிக்கு நிதியுதவியையும் நிபுணத்துவ ஆற்றலையும் வழங்குவதற்கு சீனா முன்வந்துள்ளது.

வெலிவேரிய துப்பாக்கிச் சூடு – மூன்று சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் கைது

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் வெலிவேரிய, ரதுபஸ்வெலவில் சுத்தமான குடிநீருக்காக போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 3 பேர் கொல்லப்படவும், 30 பேர் காயமடையவும் காரணமாக இருந்தார்கள் என்ற குற்றச்சாட்டில் சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜெனிவா தீர்மானத்துக்கு 47 நாடுகள் இணை அனுசரணை – இந்தியா மறுப்பு

சிறிலங்காவில் நல்லிணக்கம், மனித உரிமைகள், பொறுப்புக்கூறலை ஊக்குவித்தல் என்ற தலைப்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்துக்கு இதுவரையில் 47 நாடுகள் இணை அனுசரணை வழங்கியுள்ளன.

உலங்கு வானூர்தி பராமரிப்பு நிலையத்தை சிறிலங்காவில் அமைக்க ரஷ்யா திட்டம்

சிறிலங்காவில் பயன்படுத்தப்படும் ரஷ்யத் தயாரிப்பு உலங்கு வானூர்திகளின், பராமரிப்பு சேவை நிலையம் ஒன்றை சிறிலங்காவில் அமைப்பதற்கான யோசனையை ரஷ்யா முன்மொழிந்துள்ளது.

தமிழ் மக்கள் பொறுமையின் எல்லையை அடைந்துவிட்டார்கள் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

ஐ.நா. மனித உரிமை பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடரில் 2017 மார்ச் 23ம் நாள் நிறைவேற்றப்பட்ட 34/எல் 1 தீர்மானம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.