புதுடெல்லியில் பிம்ஸ்ரெக் நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களின் முக்கிய கூட்டம்
பிம்ஸ்ரெக் எனப்படும், வங்காள விரிகுடா நாடுகளின், பலதுறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களின் முதல் கூட்டம் இன்று புதுடெல்லியில் இடம்பெறுகிறது.
இந்தியா, சிறிலங்கா, பங்களாதேஷ், மியான்மார், தாய்லாந்து, பூட்டான், நேபாளம் ஆகிய 7 நாடுகள் பிம்ஸ்ரெக் அமைப்பில் அங்கம் வகிக்கின்றன.
இந்த நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களின் முதல் மாநாடு இன்று புதுடெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் நடைபெறுகிறது.
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் இந்த மாநாட்டுக்குத் தலைமை தாங்குகிறார்.
பாதுகாப்புச் சவால்களைச் சமாளிப்பதற்கான ஒத்துழைப்பை வலுப்படுத்தல் என்ற தொனிப்பொருளில் இந்த மாநாடு இடம்பெறுகிறது.
இதில் சிறிலங்கா சார்பில், பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி பங்கேற்கவில்லை. பாதுகாப்பு அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவரே பங்கேற்றுள்ளார்.