மேலும்

நாள்: 8th March 2017

தினேஸ் குணவர்த்தனவை வெளியேற்ற நாடாளுமன்றத்துக்கு அழைக்கப்பட்ட காவல்துறையினர்

சபாநாயகரின் உத்தரவை மீறிய கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தனவை வெளியேற்றுவதற்காக சிறிலங்கா நாடாளுமன்றத்துக்கு இன்று காவல்துறையினர் அழைக்கப்பட்டனர்.

கி.பி.அரவிந்தன்: நினைவுகளோடு தொடரும் பயணம்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாள்…..! புதினப்பலகையின் நிறுவக ஆசிரியரும், புதினப்பலகை குழுமத்தின் முதன்மைப் பங்காளருமான கவிஞர் கி.பி.அரவிந்தன் அவர்களை, நாம் இழந்த நாள்.

தென்னாபிரிக்க, அவுஸ்ரேலிய, இந்திய, பங்களாதேஷ் தலைவர்களுடன் சிறிலங்கா அதிபர் சந்திப்பு

இந்தியப் பெருங்கடல் விளிம்பு நாடுகளின் ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்களின் உச்சி மாநாட்டில் பங்கேற்ற சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, தென்னாபிரிக்கா, அவுஸ்ரேலியா, பங்களாதேஷ், மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுக்களை நடத்தினார்.

ஜகார்த்தா வரை எதிரொலித்த தமிழ்நாடு மீனவர் படுகொலை விவகாரம்

தமிழ்நாடு மீனவர்கள் மீது சிறிலங்கா கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய குற்றச்சாட்டுத் தொடர்பாக முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, இந்திய துணை குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரியிடம் தெரிவித்துள்ளார்.

குற்றச்சாட்டை மறுக்கிறது சிறிலங்கா – விசாரணை நடத்தவும், விசாரணைக்கு ஒத்துழைக்கவும் உறுதி

கச்சதீவுக் கடலில் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டு மற்றொருவர் படுகாயப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக தம்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை சிறிலங்கா கடற்படை நிராகரித்துள்ளது.

ஐ.நாவுக்கான மனுக்களில் கையெழுத்துக் குழறுபடிகள்

ஐ.நா மனித உரிமைகள் பேரவை தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சிறிலங்காவுக்கு மேலும் கால அவகாசம் வழங்கக் கோரியும், வழங்கக் கூடாது என்று கோரியும், அனுப்பப்பட்ட மனுக்களில் போலியான கையெழுத்துகள் இடம்பெற்றிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மீனவர் படுகொலையால் கொந்தளிக்கும் தமிழ்நாடு – இந்திய- சிறிலங்கா உறவுகளுக்கு சவால்

இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவர் கச்சதீவுக் கடலில் நேற்றுமுன்தினம் இரவு சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம், தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்திய- சிறிலங்கா நாடுகளுக்கிடையிலான உறவுகளுக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது.