மேலும்

நாள்: 30th March 2017

கீத் நொயார் கடத்தல் – 6 சிறிலங்கா இராணுவப் புலனாய்வு அதிகாரிகளும் பிணையில் விடுதலை

2008 ஆம் ஆண்டு ஊடகவியலாளர் கீத் நொயாரைக் கடத்திச் சென்று தாக்கினார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆறு சிறிலங்கா இராணுவப் புலனாய்வு அதிகாரிகளும் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டார் விமல் வீரவன்ச

சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டிருந்த தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இன்று தனது போராட்டத்தை கைவிட்டுள்ளார்.

புலிகளுக்கு எதிரான போரின் போது வேவு பார்த்தது இந்திய விமானம் – ஒப்புக்கொள்கிறது இந்தியா

விடுதலைப் புலிகளுடன் போர் நடந்து கொண்டிருந்த போது, சிறிலங்காவைச் சுற்றிய வான்பரப்பில் ரியூ 142 எம் என்ற இந்திய கடற்படையின் நீண்ட தூர கடல்சார் கண்காணிப்பு விமானம் விரிவான கண்காணிப்பில் ஈடுபட்டிருந்ததாக இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் சுனில் லன்பா தெரிவித்துள்ளார்.

கோத்தாவினால் மைத்திரியை வெற்றி கொள்ள முடியாது – இசுரு தேவப்பிரிய

அடுத்த அதிபர் தேர்தலில் சிறிலங்கா அதிபர் மைத்தி்ரிபால சிறிசேனவே வெற்றி பெறுவார் என்றும்,  கோத்தாபய ராஜபக்ச வெற்றி பெறுவதற்கு வாய்ப்பில்லை என்று மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.

போர்க்குற்ற விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகளை ஈடுபடுத்த சட்டத்தரணிகள் சங்கம் எதிர்ப்பு

சிறிலங்கா படையினருக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளில் வெளிநாட்டு நீதிபதிகளை ஈடுபடுத்துவதற்கு, சிறிலங்காவின் சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவர் யு.ஆர்.டி .சில்வா எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

நாட்டைப் பிரிக்க அனுமதியேன் – சிறிலங்கா பிரதமர்

தாம் ஒருபோதும் நாட்டைப் பிரிக்க அனுமதிக்கமாட்டேன் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு- மருதானையில் நேற்று புத்தர் சிலை ஒன்றை திறந்து வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

உண்மையான போர் வீரர்களை குற்றச்சாட்டுகளில் இருந்து பாதுகாப்பேன் – சிறிலங்கா அதிபர் உறுதி

உண்மையான போர் வீரர்களை போருடன் தொடர்புடைய மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளில் இருந்து பாதுகாப்போம் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.

கவிஞர் கி.பி.அரவிந்தன் நினைவு புலம்பெயர் இலக்கியப் பரிசு- 2017 : போட்டி முடிவுகள்

கவிஞர் கி.பி.அரவிந்தன் நினைவாக, காக்கைச் சிறகினிலே இதழ் சார்பில் நடத்தப்பட்ட புலம்பெயர் இலக்கியப் பரிசு- 2017 போட்டியில், புலம்பெயர் இணைய வலைப்பதிவர் தேர்வு  முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.