மேலும்

சிறிலங்காவுக்கு காலஅவகாசம் வழங்குவதற்கு இந்தியா ஆதரவளிக்கக் கூடாது – உருத்திரகுமாரன்

ruthrakumaranஐ.நா மனித உரிமைச் சபையில் சிறிலங்காவுக்கு காலஅவகாசம் வழங்கும் தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு அளிக்கக் கூடாது என்று  நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைச் சபை விவகாரம், மற்றும் ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமைக்கானதும் நீதிக்குமான போராட்டம் குறித்த சமகால நிலைவரம் குறித்த செய்தியாளர் சந்திப்பொன்று  சென்னையில் இடம்பெற்றிருந்தது.

இணையவழி காணொளிப் பரிவர்த்தனை வழியே நியூயோர்க்கில் இருந்து பிரதமர் வி.உருத்திரகுமாரன் கருத்துரைத்திருந்தார்.

ஐ.நா தீர்மானம் முன்மொழிந்த காரியங்களை கடந்த 18 மாத காலத்தில் நிறைவேற்றுவதாக ஒத்துக் கொண்ட சிறிலங்கா அரசாங்கம், எதனையும் செய்து முடிக்கவில்லை என பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் குற்றம்சாட்டினார்.

இந்நிலையில், மேலும் 2 ஆண்டுகள் அவகாசம் நீட்டித்தால் எதுவும் நடக்காது என்பதால், இந்திய அரசு சிறிலங்கா அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கக் கூடாது எனவும், இதுதொடர்பாக தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றி அழுத்தம் தர வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

சென்னையில் இடம்பெற்றிருந்த செய்தியாளர் சந்திப்பினை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தோழமை மையம் ஏற்பாடு செய்திருந்ததோடு, தோழமை மையத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சரசுவதி அவர்களும் ஊடகங்களுக்கு கருத்துரை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *