மேலும்

நாள்: 23rd March 2017

சிறிலங்கா தொடர்பான தீர்மானம் வாக்கெடுப்பின்றி நிறைவேறியது

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளால் முன்வைக்கப்பட்ட  A/HRC/34/L.1 தீர்மானம் சற்று முன்னர் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.

ரஷ்ய அதிபரைச் சந்தித்தார் சிறிலங்கா அதிபர்

அதிகாரபூர்வ பயணமாக ரஷ்யா சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை இன்று சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

அனைத்துலகப் பங்களிப்புக்கு எதிரான சிறிலங்காவின் நிலைப்பாடு- அமெரிக்கா கரிசனை

எந்தவொரு நீதிப்பொறிமுறைகளிலும், அனைத்துலக பங்களிப்புக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கத் தரப்பு வெளியிட்டு வரும் அறிக்கைகள் தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா கரிசனை வெளியிட்டுள்ளது.

வெளிநாட்டு நீதிபதிகளை வலியுறுத்திய செயிட் அல் ஹுசேன் – பதிலளிக்காது நழுவியது சிறிலங்கா

சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என்ற ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் கோரிக்கை தொடர்பாக சிறிலங்கா நழுவலான பதிலையே அளித்துள்ளது.

எல்லா பரிந்துரைகளுமே முக்கியமானவை தான் – ஐ.நா மனித உரிமை ஆணையாளர் விடாப்பிடி

சிறிலங்கா தொடர்பாக தமது அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள எல்லா பரிந்துரைகளுமே முக்கியமானவை என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் தெரிவித்துள்ளார்.

ஜெனிவா தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் – இணை அனுசரணைக்கு பின்னடிப்பு

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்படவுள்ள சிறிலங்கா தொடர்பான தீர்மானத்தை ஆதரிக்க இந்தியா முடிவு செய்திருப்பதாகவும், எனினும், இந்த தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்காது என்றும் புதுடெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகசின் சிறையில் விமல் வீரவன்ச உண்ணாவிரதம்

மகசின் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளார்.

மேஜர் ஜெனரல் சாஜி கல்லகேக்கு நுழைவிசைவு வழங்க மறுத்தது அவுஸ்ரேலியா

போர்க்குற்றங்களை இழைத்தார் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும், சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் சாஜி கல்லகேக்கு நுழைவிசைவு வழங்க அவுஸ்ரேலியா மறுத்துள்ளது.