மேலும்

தமிழ்நாட்டின் 21 ஆவது முதல்வரானார் எடப்பாடி பழனிச்சாமி

Edappadiதமிழ்நாட்டின், 21 ஆவது முதலமைச்சராக, எடப்பாடி பழனிசாமி இன்று மாலை ஆளுனர் வித்தியாசாகர் ராவ் முன்னிலையில் பதவியேற்றார்.  ஆளுனர் மாளிகையில் நடந்த எளிமையான நிகழ்வில், அவருடன் 30 அமைச்சர்களும் பதவியேற்றனர்.

இன்று மாலை சுமார் 4.37 மணிக்கு ஆரம்பமான விழாவில்,  எடப்பாடி பழனிசாமிக்கு, தமிழக ஆளுனர் வித்யாசாகர் ராவ் பதவிப் பிரமாணமும், இரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

புதிய முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றதும், 30 அமைச்சர்கள் பதவியேற்று கொண்டனர். இந்நிகழ்ச்சி 20 நிமிடங்களில் நிறைவடைந்தது.

புதிய அமைச்சரவையில் அதிமுக அவைத் தலைவர் கே.ஏ.செங்கோட்டையன் மட்டும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளார். ஏனைய அனைவரும் ஓ.பன்னீர்செல்வம் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தவர்களாவர்.

முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் கவனித்து வந்த உள்துறை, காவல், நிதி ஆகிய துறைகள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வசம் உள்ளன.  அத்துடன் ஏற்கனவே எடப்பாடி பழனிசாமியிடம் இருந்த நெடுஞ்சாலை, பொதுப்பணி ஆகிய துறைகளும் தற்போது முதல்வரிடம்  உள்ளன.

தமிழ்நாட்டில் கடந்த 10 மாதத்தில் பதவியேற்ற மூன்றாவது முதல்வர் இவராவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *