வெளிநாட்டு நீதிபதிகள் குறித்து முடிவெடுக்கும் உரிமை சிறிலங்காவுக்கே உள்ளதாம்
போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணைகளில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்குவதா இல்லையா என்பது பற்றி சிறிலங்கா அரசாங்கமே முடிவு செய்யும், அது சிறிலங்கா அரசாங்கத்தின் இறையாண்மை உரிமை என்று சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.



