மேலும்

விமல் வீரவன்சவுக்கு விளக்கமறியல் – ஆதரவாளர்களால் பதற்றம்

wimal-arrest-1அரசாங்க வாகனங்களைத் தவறாகப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட விமல் வீரவன்சவை, விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டே நீதிவான் லங்கா ஜெயரத்ன உத்தரவிட்டார்.

நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினால் இன்று மதியம் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இன்று பிற்பகல் கோட்டே நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதையடுத்து, விமல் வீரவன்சவை எதிர்வரும் ஜனவரி 24ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் லங்கா ஜெயரத்ன உத்தரவிட்டார். இதனை அடுத்து அவர் வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு கைவிலங்கு இடப்பட்ட நிலையில் அழைத்துச் செல்லப்பட்டார்.

wimal-arrest-1wimal-arrest-2wimal-arrest-3

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் வீடமைப்பு அமைச்சராக பதவியில் இருந்த போது, 40 அரச வாகனங்களைத் தவறாகப் பயன்படுததி, பொறியியல் கூட்டுத்தாபனத்துக்கு 90 மில்லியன் ரூபா இழப்பை ஏற்படுத்தினார் என்று விமல் வீரவன்ச மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக இன்று காலை விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த விமல் வீரவன்ச, இரண்டு மணிநேர விசாரணையை அடுத்து, நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினால் கைது செய்யப்பட்டார்.

விமல் வீரவன்ச கைது செய்யப்பட்டதை அறிந்த அவரது ஆதரவாளர்கள், நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வெளியே எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அத்துடன் காவல்துறை வாகனம் மீது தாக்கியும், அதன் முன்னால் நிலத்தில் படுத்திருந்தும் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்ல விடாமல் தடுக்க முயன்றனர். இதனால் சற்று பதற்றநிலை காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

படங்கள் – சண்டே ரைம்ஸ், டெய்லி மிரர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *