மேலும்

நாள்: 15th January 2017

வடக்கு, கிழக்கில் புத்தர் சிலைகளுக்கு இராணுவ பாதுகாப்பு

வடக்கு, கிழக்குப் பகுதிகளில் உள்ள விகாரைகள் மற்றும் புத்தர் சிலைகளுக்கு இராணுவப் பாதுகாப்பு வழங்க சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளது. சிங்கள நாளிதழான திவயின இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

வல்வெட்டித்துறை வானில் பறந்த வித்தியாசமான உருவங்கள் – காட்சிகளில் பட்டப்போட்டி

தமிழர் திருநாளான தைப்பொங்கலை முன்னிட்டு வல்வெட்டித்துறையில் நேற்றுமாலை நடத்தப்பட்ட பட்டப் போட்டியில் வித்தியாசமான உருவங்களில் தயாரிக்கப்பட்ட பட்டங்கள் வானத்தில் பறக்கவிடப்பட்டன.

விடைபெறுகிறார் நிஷா பிஸ்வால்

அமெரிக்காவில் புதிய அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்கவுள்ள நிலையில், தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான உதவி இராஜாங்கச் செயலராகப் பதவி வகித்த நிஷா பிஸ்வால், இராஜாங்கத் திணைக்களத்தில் இருந்து விடைபெறவுள்ளார்.

சிறிலங்காவுக்கு ஜிஎஸ்பி பிளஸ் இன்னமும் வழங்கப்படவில்லை – ஐரோப்பிய ஒன்றியம்

சிறிலங்காவுக்கு இன்னமும் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை வழங்கப்படவில்லை என்றும், இதுதொடர்பான இறுதி முடிவு இன்னமும் எடுக்கப்படவில்லை என்றும் ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.

அரசியலமைப்பு உருவாக்க செயற்பாடுகளில் இருந்து வெளியேற நேரிடும் – கூட்டமைப்பு எச்சரிக்கை

தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் யோசனையை சிறிலங்கா அரசாங்கம் கைவிடுமேயானால், அரசியலமைப்பை உருவாக்கும் செயற்பாடுகளில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்காது, அதிலிருந்து வெளியேறும் நிலை ஏற்படும் என்று எச்சரித்துள்ளார் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன்.

புதிய இந்தியத் தூதுவர் வரும் வரை முடிவை நிறுத்தி வைத்தார் சிறிலங்கா பிரதமர்

இந்தியன் ஓயில் நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கப்பட்ட சீனக்குடா எண்ணெய்க் குதங்களில் மூன்றை, சிறிலங்கா பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் பயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்ளும், முடிவை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளார்.

ஊறணியில் 400 மீற்றர் கடற்கரைப் பகுதியில் மீன்பிடிக்க அனுமதி

வலிகாமம் வடக்கில், காங்கேசன்துறைக்கும் மயிலிட்டிக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள ஊறணி பகுதியில் உள்ள 400 மீற்றர் நீளமான கடற்கரைப் பகுதியை, மட்டுப்படுத்தப்பட்டளவில் மீனவர்கள் பயன்படுத்த சிறிலங்கா படையினர், நேற்று அனுமதி அளித்துள்ளனர்.

ஈரானுக்கான பயணத்தை ரத்துச் செய்தார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, அடுத்தவாரம் ஈரானுக்கு மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த பயணத்தை ரத்துச் செய்துள்ளார்.