மேலும்

நாள்: 7th January 2017

சிறிலங்காவில் சீனாவின் திட்டங்களை எதிர்மறை சக்திகளால் தடுக்க முடியாது – சீனத் தூதுவர்

சிறிலங்காவின் எதிர்க்கட்சிகள் எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்டாலும், அம்பாந்தோட்டையில் முன்னெடுக்கப்படும் திட்டங்களை நிறைவேற்றுவதில் சீனா உறுதியுடன் இருப்பதாக தெரிவித்துள்ளது.

அம்பாந்தோட்டையில் வெடித்தது மோதல் – 21 பேர் காயம்

அம்பாந்தோட்டையில் சீனாவின் முதலீட்டுத் திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வுக்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியில் இடம்பெற்ற மோதல்களில், 21 பேர் வரை காயமடைந்தனர்.

அரசியலமைப்பு மாற்றம் குறித்து கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் 3 மணிநேரம் ஆலோசனை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்தில் இடம்பெற்றது. நேற்று மாலை 4.50 மணிக்கு ஆரம்பமாகிய இந்தக் கூட்டம் சுமார் 3 மணித்தியாலங்கள் வரை இடம்பெற்றது.

இறுதிக் கட்டத்தை எட்டியது எட்கா உடன்பாடு – இந்திய குழு கொழும்பிலிருந்து புறப்பட்டது

இந்தியா- சிறிலங்கா இடையில் கொழும்பில் இந்தவாரம் நடத்தப்பட்ட பேச்சுக்களை அடுத்து எட்கா உடன்பாடு தொடர்பான பேச்சுக்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.

கட்டுநாயக்க விமான நிலைய ஓடுபாதை புனரமைப்பு ஆரம்பம் – பயணிகள் நெரிசல்

கட்டுநாயக்க விமான நிலைய ஓடுபாதை புனரமைப்பு நடவடிக்கைகள் நேற்று ஆரம்பமாகியுள்ள நிலையில், பகுதி நேரமாக விமான நிலையம் மூடப்படுவதால், கடும் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன.

வெளிநாட்டு நீதிபதிகளுக்கு ஐ.நா அழுத்தம் கொடுக்க முடியாது – சிறிலங்கா அமைச்சர்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான கலந்தாய்வு செயலணி மீது தனக்கு நம்பிக்கையில்லை என்று சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இராணுவம், காவல்துறை தலையிடாது – சிறிலங்கா பாதுகாப்புச் செயலர்

போரின் போது இடம்பெற்ற கொடுமைகள் தொடர்பாக நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான கலந்தாய்வு செயலணியுடன் கருத்துக்களைப் பகிர்ந்தவர்கள் விடயத்தில் சிறிலங்கா இராணுவமோ, காவல்துறையோ தலையீடு செய்யமாட்டாது என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன  ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.

கலந்தாய்வு செயலணியின் பரிந்துரைகளை சிறிலங்கா அரசு ஏற்காது – லக்ஸ்மன் யாப்பா

போருடன் தொடர்புடைய சம்பவங்கள் தொடர்பாக விசாரிக்கும் பொறிமுறைகளில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்க வேண்டும் என்பது உள்ளிட்ட, நல்லிணக்க பொறிமுறைகளுக்கான கலந்தாய்வு செயலணியின் பரிந்துரைகளை சிறிலங்கா அரசாங்கம் ஏற்றுக் கொள்ளாது என்று அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.

அம்பாந்தோட்டையில் பேரணிகளுக்குத் தடை – இரத்தக்களரியை தடுக்க பாதுகாப்பு அதிகரிப்பு

அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கைத்தொழில் வலயம் தொடர்பான ஆரம்ப நிகழ்வு இன்று நடைபெறவுள்ள நிலையில், அம்பாந்தோட்டையில் பேரணிகள், கூட்டங்களை நடத்துவதற்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.