மேலும்

நாள்: 11th January 2017

செயலணியின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் – மனித உரிமைகள் கண்காணிப்பகம்

பொறுப்புக்கூறலுக்கான உள்நாட்டுப் பொறிமுறையில், வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்குவது உள்ளிட்ட, நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான கலந்தாய்வு செயலணியின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரியுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 32 ஆவது பட்டமளிப்பு விழா

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 32 ஆவது பட்டமளிப்பு விழா நேற்று ஆரம்பமாகி, இன்றும் இடம்பெற்று வருகிறது. யாழ். பல்கலைக்கழக வேந்தர் சி.பத்மநாதன் தலைமையில் நேற்றுக்காலை 9 மணியளவில் முதல் அமர்வாக படடமளிப்பு விழா இடம்பெற்றது.

வெளிநாட்டு நீதிபதிகள் குறித்து முடிவெடுக்கும் உரிமை சிறிலங்காவுக்கே உள்ளதாம்

போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணைகளில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்குவதா இல்லையா என்பது பற்றி சிறிலங்கா அரசாங்கமே முடிவு செய்யும், அது சிறிலங்கா அரசாங்கத்தின் இறையாண்மை உரிமை என்று சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

மைத்திரியை வேட்பாளராக நிறுத்த முடிவெடுக்கவில்லை – சந்திரிகா

அடுத்த அதிபர் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை வேட்பாளராக நிறுத்துவது தொடர்பாக சிறிலங்கா சுதந்திரக் கட்சி எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவில் திருத்தம் செய்ய இணங்கியது சிறிலங்கா அரசு

பயங்கரவாத தடைச்சட்டத்துக்குப் பதிலாக, புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பான வரைவில் திருத்தங்களைச் செய்ய சிறிலங்கா அரசாங்கம் இணங்கியுள்ளது.

அடுத்த அதிபர் தேர்தலில் மைத்திரியே வேட்பாளர் – எஸ்.பி திசநாயக்க

2020ஆம் ஆண்டு நடைபெறும் அடுத்த அதிபர் தேர்தலில், சிறிலங்கா சுதந்திரக் கட்சி மைத்திரிபால சிறிசேனவையே, வேட்பாளராக போட்டியில் நிறுத்தும் என்று அந்தக் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான அமைச்சர் எஸ்.பி.திசநாயக்க தெரிவித்துள்ளார்.

ரவிராஜ் கொலை வழக்கில் ஜூரிகள் சபையின் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு

நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ், கொலை வழக்கில் ஜூரிகள் சபையின் முடிவுக்கு அமைய, கொழும்பு மேல்நீதிமன்றம் அளித்திருந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யும் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.