பன்னாட்டு நீதிபதிகளுக்கான தேவையை வலுப்படுத்தும் சிறிலங்காவின் ‘நள்ளிரவு’ நீதி
சிறிலங்காவின் நீதித் துறையும் அரசும் இனம்சாரா நடுநிலைத்தன்மை கொண்டவையல்ல. போர்க்குற்றங்களுக்கும் மானிட விரோதக் குற்றங்களுக்கும் இனக்கொலைக்கும் இலக்காகிப் பாதிப்புற்ற ஏராளமான தமிழர்களுக்கு நீதி கிடைக்கச் செய்ய அவற்றால் இயலாது என்று, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.


