மேலும்

நாள்: 26th January 2017

சிறிலங்கா அரசின் வாக்குறுதியை அடுத்து உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது

வவுனியாவில் நான்கு நாட்களாக, காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களால் நடத்தப்பட்டு வந்த உண்ணாவிரதப் போராட்டம், சிறிலங்கா அரசாங்கத்தின் உறுதிமொழியை அடுத்து இன்று மாலை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.

காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் நல்லூரில் அடையாள உண்ணாவிரதம்

வவுனியாவில் இன்று நான்காவது நாளாகவும் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ள காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் இன்று அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் தூதரக சேவைப் பணியகம் யாழ்ப்பாணத்தில் திறப்பு

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் தூதரக சேவைப் பணியகம், இன்று காலை யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில், திறந்து வைக்கப்பட்டது.

இந்தியப் பிரதமரின் செய்தியுடன் வந்தார் தரன்ஜித் சிங்? – மங்கள சமரவீரவுடன் சந்திப்பு

சிறிலங்காவுக்கான புதிய இந்தியத் தூதுவராக பொறுப்பேற்றுக் கொண்ட தரன்ஜித் சிங் சந்து, நேற்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் மயக்கம் – மைத்திரிக்கு விக்கி அவசர கடிதம்

வவுனியாவில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காணாமலாக்கப்பட்ட ஒருவரின் தாயார் நேற்றுமாலை மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை சந்திக்க சுவாமிநாதனை அனுப்புகிறார் ரணில்

வவுனியாவில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ள காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களை, சிறிலங்காவின் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் இன்று சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.

மிலேனியம் சவால் நிதிய உயர்மட்டக்குழு கிளிநொச்சியில் ஆய்வு

போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதலீடுகள் மற்றும் வர்த்தக முயற்சிகள், வேலைவாய்ப்பு தொடர்பாக அமெரிக்காவின் மிலேனியம் சவால் நிதிய உயர் அதிகாரிகள் நேற்று ஆய்வுகளை மேற்கொண்டனர்.

சிறிலங்கா அரச நிர்வாகத்தில் மேற்குலகத் தலையீடு – பீரிஸ் குற்றச்சாட்டு

சிறிலங்கா அரசாங்கத்தின் முடிவுகளை எடுக்கும் செயற்பாடுகளில் மேற்குலக இராஜதந்திரிகள் தலையீடு செய்து வருவதாக கூட்டு எதிரணியைச் சேர்ந்த முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

ஜோசப் பரராஜசிங்கத்தை கொலை செய்ய பிள்ளையானே உத்தரவிட்டார் – சட்டமா அதிபர்

கிழக்கு மாகாண முன்னாள் முதல்வரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனின் உத்தரவின் பேரிலேயே, நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டார் என்று சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.