மேலும்

நாள்: 25th January 2017

மூன்றாவது நாளாகத் தொடரும் உண்ணாவிரதம் – போராட்டக்காரர்களின் உடல் நிலை மோசமடைகிறது

சிறிலங்கா படையினரிடம் கையளிக்கப்பட்டும், கடத்தப்பட்டும் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வவுனியாவில் மேற்கொண்டு வரும் உண்ணாவிரதப் போராட்டம் இன்று மூன்றாவது நாளை எட்டியுள்ளது.

திருகோணமலை துறைமுகம் மீது இந்தியா ஆர்வம்காட்டவில்லையா?

கடந்த புதன்கிழமை, அதாவது ஜனவரி 18 அன்று இந்தியாவின் புதுடில்லியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில், திருகோணமலை துறைமுகத்தை இந்தியாவிடம் கையளிப்பதற்கான வரையறைகள் தொடர்பாக சிறிலங்காவின் பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா விளக்கமளித்திருந்தார்.

மகிந்தவைக் கொல்ல றோவும், சிஐஏயும் முயற்சி – கம்மன்பில குற்றச்சாட்டு

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவை அரசியலில் இருந்து வெளியேற்றுவதற்கு இந்தியப் புலனாய்வுப் பிரிவான றோவும், அமெரிக்காவும் முயற்சித்து வருவதாக கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குற்றம்சாட்டியுள்ளார்.

மதுரையில் முள்வேலி ஊடாக விமானத்துக்குச் சென்ற சிறிலங்கன் விமான சேவை பணியாளர்கள்

தமிழ்நாட்டில் ஏறு தழுவுதல் தடைக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தினால், மதுரையில் சிறிலங்கன் விமானசேவை விமானிகளும், பணியாளர்களும் முள்வேலிகளைக் கடந்து விமானத்துக்குச் செல்லும் காட்சி அடங்கிய காணொளி ஒன்று இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பிராந்திய தூதரகப் பணியகம்

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பிராந்திய தூதரக சேவைகளுக்கான பணியகம் ஒன்று யாழ்ப்பாணத்தில் நாளை திறந்து வைக்கப்படவுள்ளது. யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்திலேயே இந்த தூதரக சேவைகளுக்கான பணியகம் இயங்கவுள்ளது.

ரவிராஜ் கொலை வழக்கு – மீளாய்வு மனுவை விசாரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் முடிவு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கில், ஜூரிகள் சபையின் முடிவுக்கு அமைய, கொழும்பு மேல்நீதிமன்றினால் அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக, அவரது மனைவி சார்பில், தாக்கல் செய்யப்பட்டு நிராகரிக்கப்பட்ட மேன்முறையீட்டு மனுவை மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள  மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

உலங்குவானூர்தியை சுட்டு வீழ்த்திய வழக்கு – சந்தேக நபரின் ஒப்புதல் வாக்குமூலம் நிராகரிப்பு

ஆனையிறவு அருகே, கொம்படி வெளியில் சிறிலங்கா விமானப்படையின் எம்.ஐ- 24 தாக்குதல் உலங்கு வானூர்தியை சுட்டு வீழ்த்தி, 4 விமானப்படை அதிகாரிகளுக்கு  மரணத்தை விளைவித்தார் என்று குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் புலி உறுப்பினரின் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை யாழ். மேல்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.