மேலும்

நாள்: 3rd January 2017

சீனத் தூதரக பாதுகாப்பு ஆலோசகர் சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு

சிறிலங்காவில் உள்ள சீனத் தூதரகத்தில் புதிய பாதுகாப்பு ஆலோசகராகப் பதவியேற்றுள்ள சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் மூத்த கேணல் சூ ஜியான்வேய் இன்று சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தனவைச் சந்தித்தார்.

மகிந்தவுக்கு ரணில் சவால்

தாம் இம்மாதம் ஒரு வாரப் பயணமாக சுவிற்சர்லாந்து செல்லவுள்ளதாகவும், முடிந்தால், தமது அரசாங்கத்தைக் கவிழ்த்துக் காட்டட்டும் என்றும் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்குச் சவால் விடுத்துள்ளார் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

சிதம்பரத்துக்கான திருவாதிரை கப்பல் சேவை திட்டம் ரத்து

சிதம்பரத்தில் நடைபெறும் திருவாதிரை உற்சவத்தில் ஈழத்து பக்தர்கள் பங்கேற்பதற்கு வசதியாக, காங்கேசன்துறையில் இருந்து காரைக்கால் துறைமுகத்துக்கு நடத்தத் திட்டமிட்டிருந்த பயணிகள் கப்பல் சேவை கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களின் பின்னணியில் மகிந்த – போட்டு உடைக்கிறது பொது பலசேனா

கடந்த ஆட்சிக்காலத்தில் அளுத்கம மற்றும் பிற இடங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்களின் பின்னணியில் மகிந்த ராஜபக்சவே இருந்தார் என்று, சிங்கள பெளத்த அடிப்படைவாத அமைப்பான பொது பலசேன குற்றம்சாட்டியுள்ளது.

ஹொரவபொத்தானையில் கலகம் செய்த 16 சிறிலங்கா படையினர் கைது

ஹொரவபொத்தானை நகரில் குழப்பம் விளைவித்த சிறிலங்கா இராணுவத்தினருக்கு எதிராக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனிவிரத்ன தெரிவித்தார்.

சிறிலங்கா: ஆசியாவின் அடுத்த மையம்?

இந்திய மாக்கடல் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் சீனாவை எதிர்த்து நிற்கக்கூடிய ஒரேயொரு பிராந்திய நாடாக விளங்கும் இந்தியாவுடன் பகைமையை வளர்க்கக்கூடாது என்பதற்காகவே அமெரிக்கா வெளிப்படையாக சிறிலங்காவின் இறைமையில் தலையீடு செய்யாதிருக்கலாம்.

பிரான்சில் தைப் பொங்கல் விழா – புலம்பெயர் தமிழர் திருநாள் 2017

பிரான்சில் தைப்பொங்கல் விழா – புலம்பெயர் தமிழர் திருநாள் 2017 இம்முறை பாரீசு பெரு நகர மையத்திலமைந்துள்ள 20வது நகரசபை வளாகத்தில் (கம்பெத்தா) நடைபெறுகிறது.