மேலும்

நாள்: 20th January 2017

பாதிக்கப்பட்டவர்களின் இதயங்களை குணப்படுத்த வேண்டியது முக்கியம் – அல் ஹுசேன்

போரினால் பாதிக்கப்பட்டவர்களின் இதயங்களை சிறிலங்கா குணப்படுத்த வேண்டியது முக்கியம் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்க அதிபராக இன்று பதவியேற்கிறார் ட்ரம்ப் – கொழும்பில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

அமெரிக்காவின் 45 ஆவது அதிபராக டொனால்ட் ட்ரம்ப் இன்று பதவியேற்கவுள்ள நிலையில், அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பில் இன்று போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

ஐந்து இந்திய மாநிலங்களுடன் தனித்தனி வர்த்தக உடன்பாடுகள் – சிறிலங்கா திட்டம்

இந்தியாவுடனான சுதந்திர வர்த்தக உடன்பாடு நடைமுறையில் இருக்கும் நிலையில், எட்கா உடன்பாட்டையும் செய்து கொள்ளவுள்ள சிறிலங்கா அரசாங்கம், இந்தியாவின் ஐந்து மாநிலங்களுடன் தனித்தனியாக உடன்பாடுகளையும் செய்து கொள்ளவுள்ளது.

இந்திய கடற்படையின் போர்க்கப்பல் உற்பத்தி கட்டுப்பாட்டாளர் சிறிலங்கா கடற்படை தளபதியுடன் பேச்சு

இந்திய கடற்படையின் போர்க்கப்பல் உற்பத்தி மற்றும் பொறுப்பேற்றல் கட்டுப்பாட்டாளர் வைஸ் அட்மிரல் தேஷ் பாண்டே, நேற்று சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

ஏறுதழுவுதல் ஆதரவு போராட்டத்தில் பங்கேற்று திரும்பிய மாணவன் விபத்தில் பலி

கிளிநொச்சியில் நேற்றுமாலை நடந்த ஏறுதழுவுதல் தடைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்று விட்டுத் திரும்பிய ஊடகத்துறை மாணவன் விபத்து ஒன்றில் சிக்கி மரணமானார்.

சிறிலங்காவில் கால் வைக்கிறது சீ்னாவின் அலிபாபா

உலகின் மிகப் பிரபலமான சீன இணைய வணிக நிறுவனமான அலிபாபா, சிறிலங்காவில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டி வருவதாக சிறிலங்கா நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

கொழும்பு துறைமுகத்தில் அமெரிக்க நாசகாரி

அமெரிக்க கடற்படையின் வழிகாட்டல் ஏவுகணை நாசகாரி கப்பலான யுஎஸ்எஸ் ஹொப்பர், நான்கு நாட்கள் பயணமாக நேற்று கொழும்பு துறைமுகத்துக்கு வந்துள்ளது.