மேலும்

மாதம்: December 2016

சிறிலங்காவின் முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க காலமானார்

சிறிலங்காவின் முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க உடல்நலக் குறைவினால் கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் இன்று மதியம் காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 83 ஆகும்.

நல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாய்வு செயலணியின் அறிக்கை ஜனவரி 3 இல் வெளியாகிறது

நல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாய்வுச் செயலணியின் அறிக்கை எதிர்வரும் 2017 ஜனவரி 03ஆம் நாள் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படவுள்ளது.

கேள்விக்குள்ளாக்கிய சிறிலங்கா நீதித்துறையின் நம்பகத்தன்மை

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஐந்து குற்றவாளிகளும் விடுவிக்கப்பட்டமையானது சிறிலங்காவின் நீதிச்சேவை மீதான நம்பகத்தை மீண்டும்  சந்தேகத்திற்கு  உள்ளாக்கியுள்ளது.

புதிய அரசியலமைப்பில் வட- கிழக்கு இணைப்பும் இல்லை, சமஷ்டியும் இல்லை

புதிய அரசியலமைப்பின் மூலம், வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மீண்டும் இணைக்கப்படவோ, ஒற்றையாட்சிக்கு பாதிப்பு ஏற்படுத்தப்படவோ மாட்டாது என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலரும் அமைச்சருமான மகிந்த அமரவீர தெரிவித்தார்.

புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் மக்கள் கவிஞர் இன்குலாப் புகழஞ்சலிக் கூட்டம்

கடந்த 01.12.2016 அன்று மறைந்த மக்கள் கவிஞர் இன்குலாப் அவர்களுக்கான புகழஞ்சலிக் கூட்டம், புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

2016இல் இந்திய – சிறிலங்கா உறவுகள் : வலிகளுக்கு மத்தியில் முன்னேற்றம்

பல்வேறு விவகாரங்களிலும், அதிருப்திகள் காணப்பட்டாலும், இந்தியாவுடனான சிறிலங்காவின் உறவானது 2016 ஆண்டில் மேலும் முன்னேற்றமடைந்துள்ளது என்று பிரிஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

சர்ச்சைகளில் சிக்கியுள்ள காலிமுகத்திடல் நத்தார் மரம் – உலக சாதனை படைக்குமா?

கொழும்பில் அமைக்கப்பட்டுள்ள கின்னஸ் சாதனைக்கான உலகின் மிக உயர்ந்த செயற்கை நத்தார் மரம் திட்டமிட்ட உயரத்தை விடவும் குறைவாகவே அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிகாரப் பகிர்வுக்கு முட்டுக்கட்டை போடும் அஸ்கிரி, மல்வத்தை பீடங்களின் மகாநாயக்கர்கள்

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது, சிறிலங்காவின் இறைமை, தேசிய பாதுகாப்பு, உள்ளிட்ட விவகாரங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று அஸ்கிரி, மல்வத்தை பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சீனாவுக்கு எதிராக நாமல் ராஜபக்ச தலைமையில் ஆர்ப்பாட்டம்

அம்பாந்தோட்டையில் சீனாவின் திட்டங்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்றை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தலைமை தாங்கி நடத்தியுள்ளார்.

மயிலிட்டியை இராணுவம் கைவிடக் கூடாது – முன்னாள் படை அதிகாரிகள் வலியுறுத்தல்

எந்தவொரு சூழ்நிலையிலும் வலி.வடக்கில் உள்ள மயிலிட்டிப் பகுதியை, சிறிலங்கா இராணுவத்தினர் விட்டுக் கொடுக்கவோ, அங்கு மீள்குடியேற்றம் செய்யவோ அனுமதிக்கக் கூடாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், தேசிய போர் வீரர்கள் முன்னணி என்ற முன்னாள் படை அதிகாரிகளின் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.