புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் மக்கள் கவிஞர் இன்குலாப் புகழஞ்சலிக் கூட்டம்
கடந்த 01.12.2016 அன்று மறைந்த மக்கள் கவிஞர் இன்குலாப் அவர்களுக்கான புகழஞ்சலிக் கூட்டம், புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
வரும் டிசெம்பர் 30ஆம் நாள் வெள்ளிக்கிழமை, மாலை 6 மணிக்கு, நடைபெறவுள்ள இந்த நிகழ்வுக்கு பத்திரிகையாளரும், எழுத்தாளருமான பி.என்.எஸ்.பாண்டியன் தலைமை தாங்குவார்.
புதுவைத் தமிழ்ச்சங்க செயலாளர், கவிஞர் மு.பாலசுப்ரமணியன் முன்னிலையில் நடைபெறும் இந்த நிகழ்வில், புகழுரைகளை, எழுத்தாளர் பா.செயப்பிரகாசம், பேராசிரியர் க.பஞ்சா ங்கம், கவிஞர் மாலதி மைத்ரி, எழுத்தாளர் போப்பு, பேராசிரியர் பா.இரவிக்குமார், பேராசிரியர் டி. மார்க்ஸ், தோழர். சு.ராமச்சந்திரன், தோழர். எல்லை .சிவக்குமார், பாவலர் புதுவைத் தமிழ் நெஞ்சன், ஆகியோர் நிகழ்த்தவுள்ளனர்.
புரட்சிக் கவிஞராக வாழ்ந்த கவிஞர் இன்குலாப், வர்க்க , சாதிய, பாலின, மதம், இனம் பண்பாட்டு வகைகளிலான ஒடுக்குமுறைக்கு எதிராக எழுதியும், போராடியும் வந்தவர்.
கவிதைகளாகவும், கட்டுரைகளாகவும், நாடகங்களாகவும், உரையாகவும், பாடல்களாகவும் அவர் தமது கருத்துக்களைப் படைத்துள்ளார்.
கவிஞர் இன்குலாப் ஈழ விடுதலைப் போராட்டத்தின் மீது தீராத பற்றுக் கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.