மேலும்

2016இல் இந்திய – சிறிலங்கா உறவுகள் : வலிகளுக்கு மத்தியில் முன்னேற்றம்

India-srilanka-Flagபல்வேறு விவகாரங்களிலும், அதிருப்திகள் காணப்பட்டாலும், இந்தியாவுடனான சிறிலங்காவின் உறவானது 2016 ஆண்டில் மேலும் முன்னேற்றமடைந்துள்ளது என்று பிரிஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

அந்த ஆய்வில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது-

“பரிந்துரைக்கப்பட்டுள்ள பொருளாதார மற்றும் தொழினுட்ப உடன்படிக்கை தொடர்பான முரண்பாடு, இரு நாடுகளின் கடலிலும் மீனவர்கள் சட்ட ரீதியற்ற மீன்பிடியில் ஈடுபடுதல், இலங்கைத் தீவில் சீனா தனது செல்வாக்குச் செலுத்துகின்றமை போன்ற  விடயங்கள் சிறிலங்கா – இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையில் அதிருப்தியை ஏற்படுத்தி போதிலும் உயர்மட்ட பரிமாற்றங்கள் மற்றும் உடன்படிக்கைகள் கைச்சாத்திட்டதன் மூலம் இந்தியாவுடனான சிறிலங்காவின் உறவானது 2016ல் மேலும் முன்னேற்றமடைந்துள்ளது.

வரலாற்று ரீதியாக நோக்கில், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவானது சில விடயங்களில் முரண்பாட்டை ஏற்படுத்தியுள்ளது. 1980களில், ஈழத்தமிழர் விவகாரமானது இவ்விரு நாடுகளின் உறவில் விரிசலை ஏற்படுத்தியது.

அதேபோன்று இரு நாட்டு மீனவர்களும் சட்டரீதியற்ற வகையில் மீன்பிடியில் ஈடுபடுதல் மற்றும் முதலீட்டைக் காரணமாகக் கொண்டு சீனா மீது சிறிலங்கா அதிகம் தங்கியிருத்தல் போன்ற சில விடயங்களே சிறிலங்கா – இந்தியா உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு சிறிலங்கா மற்றும் இந்திய ஆட்சிகளில் மாற்றங்கள் ஏற்பட்ட பின்னர், 2016ல் இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் முதிர்ச்சித்தன்மை ஏற்பட்டுள்ளதற்கான அறிகுறி தென்படுகிறது.

ஜம்மு – காஷ்மீரீல் நிலைகொண்டுள்ள இந்திய இராணுவம் மீது பாகிஸ்தானிய தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து பாகிஸ்தானில் நவம்பர் மாதம் நடைபெறத் தீர்மானிக்கப்பட்ட தென்னாசியப் பிராந்திய ஒத்துழைப்புச் சங்கத்தின் (சார்க்) மாநாட்டை இந்தியா புறக்கணிப்பதாக அறிவித்த போது சிறிலங்கா இந்த மாநாட்டை நிறுத்தியதானது மிக முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாகும்.

காலியில் கடந்த மாதம் இடம்பெற்ற பாதுகாப்பு சார் கலந்துரையாடலில் இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் சுனில் லன்பா கலந்து கொண்டிருந்தார். இந்திய மாக்கடல் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் சீனாவின் செல்வாக்கை நிறுத்துவதற்கான ஒருங்கிணைந்த இருதரப்பு கடல்சார் பாதுகாப்பு உறவுகளைக் கட்டியெழுப்புவதே இந்தியக் கடற்படைத் தளபதி காலிக் கலந்துரையாடலில் கலந்து கொண்டமைக்கான பிரதான காரணமாகும்.

முதலீடு மற்றும் இராணுவத் தேவைகளுக்காக சிறிலங்காவானது சீனா மீது தங்கியிருப்பது அதிகரித்துள்ளதால் சிறிலங்கா மீதான பொருளாதார மற்றும் கடல்சார் பாதுகாப்பிலும் சீனா தனது செல்வாக்கை அதிகரித்துள்ளது. சீனா தனது பொருளாதார மற்றும் கட்டுமானப் பரிந்துரைகளை  சிறிலங்கா நோக்கித் தள்ளுவதில் சீனா ஆர்வமாக உள்ளது.

சிறிலங்காவுடன் உறவுகளைப் பலப்படுத்திக் கொள்வதற்காக இந்தியா தற்போது பொருளாதார ஒத்துழைப்பை மையப்படுத்தி செயற்படுகிறது. சிறிலங்கா அரசாங்கமும் இந்தியாவுடன் பொருளாதார உறவுகளின் ஊடாகத் தனது நாட்டைக் கட்டியெழுப்புவதில் ஆர்வமாக உள்ளது.

ஒக்ரோபர் மாதத்தின் முதல் வாரம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவிற்குப் பயணம் செய்த போது, இவ்வாண்டு இறுதிக்குள் இந்தியாவுடன் பொருளாதார மற்றும் தொழினுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதை சிறிலங்கா எதிர்பார்ப்பதாக தெரிவித்திருந்தார்.

28 உறுப்பினர்களைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார வலயத்திலிருந்து பிரித்தானியா விலகிக் கொள்வதாக தீர்மானித்த போது, இந்தியாவுடன் பொருளாதார மற்றும் தொழினுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கையை விரைந்து மேற்கொள்ள வேண்டியதன் தேவையை விக்கிரமசிங்கவின் கருத்தின் மூலம் அறியமுடிந்தது.

இந்த உடன்படிக்கையால் இந்தியா நன்மை பெறும் என சந்தேகம் அடைந்ததால் இழுபறிநிலையில் உள்ளது. சீனாவிடமிருந்து சிறிலங்காவிற்குக் கிடைக்கும் பாரிய முதலீடுகளை நிறுத்துவதற்கான ஒரு கண்துடைப்பாகவே இந்தியா இந்த உடன்படிக்கையை மேற்கொள்ள முன்வருவதாக சிறிலங்கா கூட்டு எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

‘பொருளாதார மற்றும் தொழினுட்ப உடன்படிக்கையை அமுல்படுத்துவதன் மூலம் இந்தியா தனது நாட்டில் நிலவும் வேலையில்லாப் பிரச்சினையைத் தீர்க்க முடியும் எனத் தோன்றுகிறது. இந்த உடன்படிக்கையானது இந்தியர்களுக்கு ஒரு மில்லியன் தொழில்களைப் பெற்றுக் கொள்ள முடியும்’ என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

ஆனால் இந்த உடன்படிக்கைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் ‘அரசியல் ரீதியாக உந்தப்பட்டுள்ளன’ என தெரிவித்ததன் மூலம் இந்த உடன்படிக்கையில் தனது அரசாங்கம் கைச்சாத்திடும் தீர்மானத்தை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பாதுகாத்துள்ளார்.

வழிமூலம்        – பிரிஐ
மொழியாக்கம் – நித்தியபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *