மேலும்

நல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாய்வு செயலணியின் அறிக்கை ஜனவரி 3 இல் வெளியாகிறது

dr-paikiasothy-saravanamuttuநல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாய்வுச் செயலணியின் அறிக்கை எதிர்வரும் 2017 ஜனவரி 03ஆம் நாள் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படவுள்ளது.

அதே நாளில் இந்த அறிக்கை, இணையத்தளத்தில் பகிரங்கமாக வெளியிடப்படும் என்று, நல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாய்வுச் செயலணியின் செயலர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்துள்ளார்.

தமது செயலணி  நடத்திய பல்வேறு சமூகங்களுடன் நடத்திய நேர்காணல்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், மதத் தலைவர்களுடன் நடத்திய கலந்துரையாடல்கள், குழுநிலை விவாதங்கள், மூலம், 7500 யோசனைகளைப“ பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த யோசனைகளின் அடிப்படைகள் தமது அறிக்கையில் உள்ளப்படக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.

நல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாய்வுச் செயலணியானது கடந்த ஜனவரி மாதம் 26ஆம் நாள் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் உருவாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *