மேலும்

மாதம்: December 2016

அரசியல்தீர்வுக்கு அழைத்த போது சம்பந்தன் வரவில்லை – மகிந்த குற்றச்சாட்டு

போருக்குப் பின்னர் தாம் அரசியல் தீர்வுக்குச் செல்ல விரும்பி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் ஏனைய கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த போதிலும், அவர்கள் தம்முடன் கலந்துரையாடக் கூட விரும்பவில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.

மகிந்தவின் அச்சுறுத்தல் ‘வெற்று வேட்டு’ – ஐதேக கிண்டல்

சிறிலங்காவில் தற்போது ஆட்சியில் உள்ள கூட்டு அரசாங்கத்தை அடுத்த ஆண்டு பதவி கவிழ்ப்பேன் என்று முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச விடுத்துள்ள எச்சரிக்கையை வெற்று வேட்டு என்று ஐதேக குறிப்பிட்டுள்ளது.

புதிய ஆண்டில் மைத்திரி- ரணில் கூட்டு அரசை கவிழ்ப்பேன் – மகிந்த சூளுரை

புதிய ஆண்டில் மைத்திரிபால சிறிசேன- ரணில் விக்கிரமசிங்க கூட்டு அரசாங்கத்தை கவிழ்ப்பதே தனது இலக்கு என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டை குறித்த குற்றச்சாட்டுகள் – சிறிலங்கா அதிபரிடம் சீனத் தூதுவர் கவலை

கொழும்பில் உள்ள சீனத் தூதுவர் யி ஷியாங்லியாங் நேற்றுக்காலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை அவசரமாகச் சந்தித்து, அம்பாந்தோட்டை துறைமுக உடன்பாடு குறித்து எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக கவலை வெளியிட்டுள்ளார்.

நீதித்துறையின் நம்பகத்தன்மைக்கு சவாலாகியுள்ள ஜூரிகள் சபை விசாரணை

பாதுகாப்புப் படையினர் பிரதிவாதிகளாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களாகவும் காணப்படும் அரசியல் சார்ந்த வழக்குகளில் ஜூரி சபையின் விசாரணை பொருத்தமற்றது என சட்டவாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

சிறிலங்கா அதிகாரிகள் குழு புதுடெல்லி விரைவு

மீனவர்களின் விவகாரம் தொடர்பாக பேச்சுக்களை நடத்துவதற்காக சிறிலங்காவின் அதிகாரிகள் குழுவொன்று இரண்டு நாட்கள் பயணமாக இன்று இந்தியாவுக்குச் செல்லவுள்ளது.

ரட்ணசிறி விக்கிரமநாயக்கவின் மறைவுக்காக தேசிய துக்க நாள் இல்லை

சிறிலங்காவின் முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அறிவிக்கப்பட்டிருந்த தேசிய துக்க நாளை சிறிலங்கா அரசாங்கம் விலக்கிக் கொண்டுள்ளது.

சர்வதேச அரசியலும் சமூகத் தளங்களும் – லோகன் பரமசாமி

இங்கிலாந்திலிருந்து வெளிவரும் பத்திரிகை புலம்பெயர் தமிழ் மக்களது போராட்டத்தை Black Berry  revelolution என்ற பெயரில் அழைத்திருந்தது. ஏனெனில் அந்த காலங்களில் Black Berry  என்ற கைதொலைபேசி மிகவும் பிரபல்யமாக இருந்தது. – லண்டனில் இருந்து  புதினப்பலகைக்காக லோகன்  பரமசாமி.

ஒட்டாவா பிரகடனத்தில் கையெழுத்திடுவதற்கு சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு முட்டுக்கட்டை

இராணுவ முகாம்களைப் பாதுகாப்பதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்ட பின்னரே, கண்ணிவெடிகளைத் தடை செய்யும் அனைத்துலகப் பிரகடனத்தில் சிறிலங்கா அரசாங்கம் கையெழுத்திடும் என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.

அலெப்போவில் போர்க்குற்றங்கள்: சிறிலங்காவில் நேற்று, சிரியாவில் இன்று

கடந்த சில நாட்களாக சிரியாவின் அலெப்போ நகர மக்களுக்கெதிராக ரஷ்ய சிரிய அரச படைகள் மேற்கொண்டு வரும் கொடூரமான போர்க்குற்றங்கள் 2009ம் ஆண்டின்போது சிறிலங்கா அரசு ஈழத் தமிழ் மக்கள் மீது நடத்திய இனப்படுகொலையை நினைவுக்குக் கொண்டு வருகின்றது.