மேலும்

சிறிலங்காவின் முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க காலமானார்

ratnasiri-wickremanayakeசிறிலங்காவின் முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க உடல்நலக் குறைவினால் கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் இன்று மதியம் காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 83 ஆகும்.

உடல்நலன் பாதிக்கப்பட்ட ரட்ணசிறி விக்கிரமநாயக்க, கடந்த சில நாட்களாக கொழும்பு தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார்.

எனினும் சிகிச்சை பலனளிக்காத நிலையில் அவர் இன்று மதியம் காலமானார்.

ratnasiri-wickremanayake

சந்திரிகா குமாரதுங்க அதிபராக இருந்த போது, பிரதமராகப் பதவி வகித்த சிறிமாவோ பண்டாரநாயக்க மரணமானதையடுத்து, 2000ஆம் ஆண்டு ரட்ணசிறி விக்கிரமநாயக்க பிரதமராக நியமிக்கப்பட்டார்.

2001ஆம் ஆண்டு வரை பிரதமர் பதவியில் இருந்த அவர், மகிந்த ராஜபக்ச அதிபராகப் பொறுப்பேற்ற பின்னர், 2005ஆம் ஆண்டு மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்டார். 2010ஆம் ஆண்டு வரையில் அவர் சிறிலங்காவின் பிரதமராகப் பதவி வகித்தார்.

அதன் பின்னர் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் மூத்த அமைச்சராகவும் பணியாற்றியிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *