தொடங்கியது இந்திய- சிறிலங்கா இராணுவ கூட்டுப் பயிற்சி
இந்திய- சிறிலங்கா இராணுவத்தினர் பங்கேற்கும் மித்ரசக்தி கூட்டு இராணுவப் பயிற்சி அம்பேபுஸ்ஸவில் உள்ள சிறிலங்கா இராணுவத்தின் சிங்கப்படைப்பிரிவுத் தலைமையகத்தில் நேற்று ஆரம்பமானது.
இந்திய- சிறிலங்கா இராணுவத்தினர் பங்கேற்கும் மித்ரசக்தி கூட்டு இராணுவப் பயிற்சி அம்பேபுஸ்ஸவில் உள்ள சிறிலங்கா இராணுவத்தின் சிங்கப்படைப்பிரிவுத் தலைமையகத்தில் நேற்று ஆரம்பமானது.
கொக்குவிலில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சிறிலங்கா காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், இந்தப் படுகொலைக்கு விரைவான நீதி கோரியும், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்று காலை யாழ். மாவட்டச் செயலகத்தையும், வடமாகாண ஆளுனர் செயலகத்தையும் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
பாதுகாப்பு விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் மட்டப் பதவியை ஒன்றை உருவாக்குவதில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கவனம் செலுத்தியுள்ளதாக சிறிலங்கா அதிபர் செயலக வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் மரணங்கள் தொடர்பாக உண்மை கண்டறியும் அதிகாரிகள் குழுவொன்றை யாழ்ப்பாணம் அனுப்பவுள்ளதாக சிறிலங்காவின் தேசிய காவல்துறை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகை சிறிலங்காவுக்கு மீளக் கிடைப்பது, அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் பொருளாதார மற்றும் அரசியல் மறுசீரமைப்பு செயற்பாடுகளிலேயே தங்கியிருப்பதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சிறிலங்கா காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக பக்கசார்பற்ற விசாரணை நடத்தப்படும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தமக்கு உறுதி வழங்கியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
சுன்னாகம் நகரில் மூகமூடி அணிந்து உந்துருளிகளில் வந்த மர்ம நபர்கள் வாளால் வெட்டியதில், சிறிலங்கா காவல்துறையின் தேசிய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் இருவர் காயமடைந்தனர். இன்று பிற்பகல் 2 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொக்குவில் பகுதியில் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவர், சிறிலங்கா காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, நாளை மறுநாள் வடக்கு மாகாணத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கொக்குவில் – குளப்பிட்டிப் பகுதியில் சிறிலங்கா காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டினால், ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த யாழ்.பல்கலைக்கழக மாணவன் நடராஜா கஜனின் இறுதி நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது.