சுன்னாகத்தில் தேசிய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் மீது வாள்வெட்டு – இருவர் காயம்
சுன்னாகம் நகரில் மூகமூடி அணிந்து உந்துருளிகளில் வந்த மர்ம நபர்கள் வாளால் வெட்டியதில், சிறிலங்கா காவல்துறையின் தேசிய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் இருவர் காயமடைந்தனர். இன்று பிற்பகல் 2 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.